"உறுப்பு".. அந்த 16 பேரையும் காணோமே.. இதுதான் விஷயமா.. திகிலை கிளப்பும் விழுப்புரம் அன்பு ஆசிரமம்
விழுப்புரம் அருகே அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் இருந்த 16 பேரின் கதி என்ன ஆயிற்று என தெரியவில்லை
விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்கள், திடீரென எங்கே போயிருப்பார்கள்? என்ன ஆனார்கள்? என்ற கேள்விகள் வெடித்து கிளம்பி உள்ளதுடன், அதுதொடர்பான சில சந்தேகங்களும், யூகங்களும் வட்டமடிக்க துவங்கிவிட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் குண்டலபுலியூரில் இயங்கி வந்தது அன்பு ஜோதி ஆசிரமம்.. இங்கு ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் , மனநலம் குன்றியோர் என 150க்கும் மேற்பட்டோர் இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சங்கிலியாக கட்டப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

மிஸ்ஸிங்
ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜுபின், ஆசிரமம் மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உள்பட 144 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தினை மூடி சீல் வைக்கவும் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான். ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 16 பேரை காணவில்லை என்று தகவல் பரவியது.

உறுப்புகள்
இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆசிரமத்தில் இருந்தவர்களை குரங்குகள் கடித்து குதறி வருகிறது என்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குரங்குகளை விட்டு கடிக்க வைத்து கொடூரம் செய்வதாகவும் தகவல் பரவுகிறது. அப்படி குரங்குகளால் கடித்து தாக்கப்பட்ட அந்த 16 பேரும் உயிர் இழந்திருப்பார்களா என்ற சந்தேகம் கடந்த 2 நாட்களாகவே வட்டமடித்தது. ஆனால், இப்போது, அவர்கள் உடல் உறுப்புகளை திருடுவதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற அச்சமும் எழுந்து பரபரப்பை கிளப்பி வருகிறது. இதனிடையே இன்னொரு தகவலும் கிளம்பி உள்ளது..

உடல் உறுப்புகள்
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆதரவற்றோர் சடலங்களை, போலீசாரே இந்த காப்பக நிர்வாகியிடம் ஒப்படைத்து, இறுதிச் சடங்கு செய்யும்படி கொடுத்து வந்துள்ளனராம்.. அந்த வகையில், 300க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிச் சடங்கும் செய்யப்பட்டுள்ளது.. ஒருவேளை, இதனை பயன்படுத்தி, மர்மமான முறையில் ஆசிரமத்தில் இறந்தவர்கள் உடலையும் இவர்கள் தகனம் செய்திருக்கக்கூடுமோ என்று அந்த பகுதி மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.. உடல் உறுப்புக்காக மனநிலை பாதித்தோர், முதியோர் போன்றவர்கள் கடத்தப்பட்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற புகாரும் எழுந்துள்ளது..

ஹை டென்ஷன்
ஆதரவற்றோர் சடலங்களை போலீசாரே அவ்வப்போது வழங்கி உள்ளதால், இந்த விவகாரத்தில், விசாரணைக்கு போலீசார் தயங்குவதாகவும் ஒரு அதிருப்தி நிலவுகிறது. இப்போதைக்கு இந்த விவகாரத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்றவர்கள் தனித்தனியாக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.. முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என்று சொல்லும் அதிகாரிகள், ஏன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் கிளம்பி உள்ளது. இப்படி பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ள நிலையில், 16 பேர் என்ன ஆனார்கள்? என்பதே உச்சக்கட்ட பீதியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications