விக்கிரவாண்டி கோதாவில் குதிக்கும் அதிமுக.. சிவி சண்முகம் வேட்பாளரா? யாரை ’டிக்’ அடிப்பார் எடப்பாடி?
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிமுக சார்பில் விழுப்புரம் முன்னாள் எம்எல்ஏவும் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சிவி சண்முகத்தை வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் மேலும் இருவரும் இந்த போட்டியில் இருக்கின்றனர். யாரை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக தேர்வு செய்வார் என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் விழுப்புரத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையம்: தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி ஒரு எம்எல்ஏ எம்பி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. புகழேந்தி உயிரிழப்புக்கு முன்னதாகவே மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை ஆகியவை நிறைவடைந்து இருக்கின்றன. இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.
விக்கிரவாண்டி இடை தேர்தல்: அதன்படி வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்து ஜூன் 21ஆம் தேதி நிறைவடைகிறது. 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும் 26ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் 13-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
கட்சிகள் பரபரப்பு: தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் காலை எடுத்து வைத்திருக்கின்றன. மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த ஒரு மாத காலத்திற்கு உள்ளாகவே இடைத்தேர்தல் அறிவிப்பும் வந்திருப்பதால் அவசரகதியில் வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் விரைவில் ஒரு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் யார்?: அதிமுக சார்பில் யார் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் விழுப்புரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகத்தை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சிவி சண்முகம்: விக்கிரவாண்டி தொகுதியை பொருத்தவரை வன்னியர்கள் அதிக வாக்கு வங்கியை வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக சிவி சண்முகத்தை வேட்பாளராக களமிறக்கினால் வெற்றி வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்கின்றனர். மேலும் இரட்டை இலை சின்னமும், மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ள சி.வி சண்முகத்தை வேட்பாளராக களம் இறக்கும்போது மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல முடியும். இதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர்.
வாய்ப்பு யாருக்கு?: அது மட்டுமல்லாமல் மேலும் இருவரது பெயரும் அதிமுக வேட்பாளர் பரிசீலனையில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம்
பன்னீர்செல்வம், காணை மேற்கு ஒன்றிய செயலாளரும் விக்கிரவாண்டியின் முன்னாள் எம்எல்ஏவும் ஆன முத்தமிழ்செல்வன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது. இவர்களில் யாரை எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளராக தேர்ந்தெடுப்பார் என்பதுதான் தற்போதைய அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications