விக்கிரவாண்டியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் ’இவர்’ தான்! 30 நாள் தான் டைம்..ரேஸுக்கு தயாரான திமுக!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் நாணயம் திடீரென வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் திமுக சார்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியல் தயாராக இருப்பதாகவும் சூழ்நிலைக்கேற்ப தலைமை டிக் அடிக்கும் வேட்பாளர் ஒருவர் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவும் ஆக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

vikravandi assembly by election 2024 Election commission dmk mk stalin

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது தான் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதை எடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்த போதும் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் ஆறாம் தேதி புகழேந்தி காலமானார் அவரது மரணத்தை தொடர்ந்து அந்த தகவலை தமிழ்நாடு சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது. இதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் ஏழாம் கட்ட தேர்தலோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13 தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 14ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலுக்கு சரியாக இன்னும் 30 நாட்களே இருக்கும் நிலையில் இந்த செய்தி அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் திமுகவோ ஏற்கனவே இதற்கு தயாராக இருந்ததாகவே கூறப்படுகிறது. மேலும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப அதில் ஒரு வேட்பாளர் களத்தில் இறக்கப்படுவார் என கூறுகின்றனர் விழுப்புரம் மாவட்ட திமுகவினர். அந்த வகையில் யார் யார் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் விக்கிரவாண்டி மாவட்ட ஊராட்சி குழு தலைவரான ஜெயச்சந்திரன். கட்சியில் சீனியர் என்பதோடு ஏற்கனவே பொறுப்பில் இருப்பதால் தொகுதி மக்களுடன் நல்ல பழக்கம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தொண்டர்களுடனும் நெருக்கம், நிர்வாகிகள் மட்டத்தில் ஆதரவு என இந்த பட்டியலில் ஜெயச்சந்திரன் முதலிடத்தில் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்ட பொருளாளர் ஆன ஜனகராஜ், விவசாய அணி துணை செயலாளரான அன்னியூர் சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான தினகரன் ஆகியோர் இருக்கின்றனர்.

இவர்களையெல்லாம் விட மிக முக்கிய கவனம் பெற்று இருப்பவர் மறைந்த எம்எல்ஏ புகழேந்தியின் மகனான செல்வகுமார். தற்போது திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறியாளர் அணி செயலாளராக இருக்கும் செல்வகுமார் களமிறக்கப்படவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மேலும் சிலரது பெயர்களும் தலைமைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் மேற்கண்ட பட்டியலில் இருக்கும் ஐந்து பேர் தேர்தலில் களம் இறக்கப்படலாம் என்கின்றனர் திமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+