"வெட்கம் முளைக்குது, வெப்பமடிக்கிது".. முந்திரி விற்கும் மாணவியின் "வெள்ளை" சிரிப்பில் வீழ்ந்த இணையம்

முந்திரி விற்கும் மாணவி ஒருவரின் சிரிப்பு இணையத்தில் வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ஒரு மாணவியின் சிரிப்பு இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.. இந்த இளம்பெண்ணுக்கு பலரும் திரண்டு வந்து வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். என்ன காரணம்?

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

 முந்திரி பாக்கெட்

முந்திரி பாக்கெட்

அந்தவகையில் இப்போதும் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. சாலையில் முந்திரி விற்கும் ஒரு இளம்பெண்ணின் சிரிப்பும் தன்னம்பிக்கையும், இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.. உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் அந்த இளம்பெண் நின்று, முந்திரி விற்கிறார்.. தன்னுடைய இரு கைகளிலும் முந்திரி பாக்கெட்டுகளை அள்ளித்திணித்து கொண்டு, அந்த டோகேட்டில் இங்குமங்குமாய் ஓடியோடி விற்கிறார்.. அப்போது அந்த வழியாக TechGuruji என்ற யூட்யூபர், அந்த பெண்ணின் அருகில் சென்று, படிக்கிறீங்களா? என்ன படிச்சிட்டு இருக்கீங்க? என்று கேட்கிறார்..

வெட்கம்

வெட்கம்

அதற்கும் அந்த பெண் வெட்கப்பட்டு சிரிக்கிறார்.. காலேஜ் 2வது வருடம் படிப்பதாக சொல்லி மறுபடியும் வெட்கப்படுகிறார்.. இதைக்கேட்ட அந்த நபர், இதுக்கெல்லாம் கூச்சப்படக்கூடாது.. வெட்கப்பட இதில் ஒண்ணுமில்லை.. படிச்சிக்கிட்டே வேலை பார்க்கிறதெல்லாம் பெரிய விஷயம்... நல்லா படிங்க... இது வாழ்க்கையில் இல்லை.. உங்க சிரிப்பு தான் என்னை இங்கே இழுத்துட்டு வந்துடுச்சு. என்கிறார்.. இதைக்கேட்டதும் அந்த மாணவி, மறுபடியும் வெட்கப்பட்டு முகத்தை மறைத்து கொள்கிறார்..அந்த யூடியூர் மாணவிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்.

 கொல்லையிலே

கொல்லையிலே

இதற்கு பிறகு, வேறு சில நபர்கள் அவரது குடும்பத்தை பற்றி மாணவி வசந்தியிடம் விசாரிக்கிறார்கள்.. அதற்கு அவர், "என்னுடைய அப்பா, அம்மா கொல்லையில் விவசாயம் பார்த்துட்டு வர்றாங்க. உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில், விடிகாலை நேரத்தில் மட்டும், என் அப்பா முந்திரி விற்பனை செய்து வருகிறார்.. நானும் படிச்சிட்டே, அப்பாவுக்கு உதவியா இங்கே இருக்கேன்.. இந்த வேலைக்கு நானாகத்தான் வந்தேன்.. அவங்க என்னை வற்புறுத்தவில்லை.. ஆனால் குடும்ப வறுமையின் காரணமாக என்னால், கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.. யாராவது படிக்க உதவினால் நன்றாக இருக்கும்... எவ்வளவு கஷ்டப்பட்டாலும், தான் படிச்சே தீரணும்" என்றார் வசந்தி.

வெள்ளந்தி

வெள்ளந்தி

சாதாரணமாகவே இந்த பெண் பேசினாலும், அந்த சிரிப்பு மட்டும் நிற்கவேயில்லை.. ஒவ்வொரு கேள்விக்கும் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார் வசந்தி.. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த மாணவி வசந்திக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லி வருகிறார்கள்.. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.. 15 மணி நேரத்திற்குள் இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து விட்டது. அதனால்தானோ என்னவோ, இந்த வசந்தியின் படிப்புக்கு உதவிக்கரங்களும் ட்விட்டரில் குவிய ஆரம்பித்துவிட்டது.

 வெடித்த வெட்கம்

வெடித்த வெட்கம்

முதல் உதவி திமுக தரப்பில் இருந்து கிளம்பி உள்ளது.. செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் கவனத்திற்கு வசந்தி வைத்த கோரிக்கை தெரியவந்துள்ளது. உடனே மாணவி வசந்தி, மற்றும் அவரது அப்பாவை துன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து, கல்விக் கட்டணத்திற்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறி வசந்தியின் கனவை உடனடியாக நினைவாக்கியுள்ளார்... மேலும் எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் தன்னிடம் கேட்கும்படியும் மொக்தியார் அலிமஸ்தான் கூறியுள்ளார்.. இந்த உதவியை நெகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட வசந்தி, மொக்தியார் அலிமஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இப்போது மொக்தியார் அலிமஸ்தானுக்கும் பாராட்டுக்கள் குவிய தொடங்கிவிட்டது.

 ஃபர்ஸ்ட் மணி

ஃபர்ஸ்ட் மணி

இணையத்தில் வைரலான வசந்தியின் அந்த வீடியோ, அநேகமாக விடிகாலை 4 மணிக்கு டோல்கேட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. அந்த நேரத்திலும் இந்த பெண்ணின் முகத்தில் சோர்வு இல்லை.. களைப்பு இல்லை.. சலிப்பு இல்லை.. கையில் உள்ள முந்திரியை விற்றுவிட்டு, காலேஜ் செல்ல வேண்டுமே என்ற பதைபதைப்பும் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.. எளிமையிலும் அந்த வெள்ளந்தி சிரிப்புதான், பலரையும் கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.. கைநிறைய உள்ள முந்திரி பாக்கெட்டுகளால் தன் முகத்தையே மூடி மறைத்துக்கொண்டாலும், அதையும் மீறி பீறிட்டு பளிச்சிட்டு போகிறது அந்த வெட்கம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+