Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறும்பட நடிகை திடீர் தற்கொலை.. அவசர அவசரமாக சடலத்தை புதைக்க ஏற்பாடு.. என்ன காரணம்..?

குறும்பட நடிகை தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சிசுக்குரல் என்கிற குறும்படத்தில் நடித்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை.

விழுப்புரத்தில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாறன்... இவரது மகள் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது17.. இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சிசுக்கொலை என்கிற குறும்படத்தில் பிரியா நடித்திருக்கிறார்... அந்த குறும்படத்திற்கான டீஸர், கடந்த 2 நாளைக்கு முன்புதான் வெளியாகியிருக்கிறது... இந்நிலையில் அன்று இரவே, அவர் வீட்டில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 டீசர் வெளியீடு

டீசர் வெளியீடு

குறும் படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், மாணவியின் தற்கொலை அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. பிரியாவின் நண்பர்கள், சடலத்தை பார்த்து கதறி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.. எதற்காக இவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை..ஆனால், கடந்த சில நாட்களாகவே மாணவிக்கு வயிறு வலி இருந்ததாகவும், அதனாலேயே தற்கொலை செய்திருக்கலாம் என்றும் குடும்பத்தினர் கூறுகிறார்கள்..

வயிற்றுவலி

வயிற்றுவலி

ஆனால், குறும்படம் வெளியான அதே நாளில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறும்படத்தில் நடித்ததற்கும், தற்கொலைக்கும் தொடர்பு உள்ளதாக சோஷியல் மீடியாவிலும் தகவல் பரவ தொடங்கி விட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும், சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் டவுன் போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர்..

 காதல் விவகாரமா?

காதல் விவகாரமா?

மாணவி குறும்படத்தில் நடித்ததால், இதனால், ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரியா தற்கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்... மற்றொருபக்கம் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை 2வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது.. எனினும் இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, பிரியாவின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்த அவரது பெற்றோர் அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்ததாக கூறப்படுகிறது..

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

எனவே, பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார்.. அதற்கு பிறகுதான், மாணவியின் சடலம், போஸ்ட் மார்ட்டம் செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. அந்த ரிப்போர்ட் இன்னும் வரவில்லை.. இதனிடையே, மாணவியின் பெற்றோர்கள் விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் மகளின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை என்று கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+