"அடங்காத" சாந்தி.. காதலனுக்காக கணவனை அடித்தே கொன்று.. லுங்கியில் தொங்கவிட்ட பயங்கரம்.. செஞ்சியில்!
கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்
விழுப்புரம்: அப்பாவி கணவனை, கள்ளக்காதலனை வைத்தே அடித்து கொன்றுள்ளார் சாந்தி.. லுங்கியிலேயே ஏரிக்கரை மரத்தில் பிணமாக தொங்கவிட்ட சம்பவம் செஞ்சியையே அலற வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேல்வயலாமூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் கார்த்திகேயன்.. 32 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி.
இவரது மனைவிதான் சாந்தி. அவருக்கு 30 வயதாகிறது. கடந்த 17-ந் தேதி இரவு அங்கிருந்த ஒரு ஏரிக்கரை மரத்தில் கார்த்திகேயன் பிணமாக தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

போஸ்ட் மார்ட்டம்
இதையடுத்து அவலூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்தனர்.. கார்த்திகேயன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையும் ஆரம்பமானது..

காயங்கள்
அன்றைய தினம், ஏரிக்கரைக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றுவிட்டு வருவதாக சாந்தியிடம் சொல்லிவிட்டுதான் போயுள்ளார்.. இதனைடயே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உடம்பில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டது.. அதனால் யாரேனும் ஏரிக்கரையில் அவரை அடித்து தொங்கவிட்டிருக்கலாமோ என்று சந்தேகம் வலுத்த நிலையில், சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கள்ளக்காதல்
முதல் விசாரணையே சாந்தியிடம்தான்.. காரணம் நாசமாய் போன கள்ளக்காதல்... திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி என்பவருடன் சாந்திக்கு தொடர்பு இருந்துள்ளது.. கரும்பு வெட்ட கிராமத்துக்கு வரும்போதுதான் தங்கமணியுடன் சாந்தி குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது... அப்போதுதான் சாந்தியுடன் லவ் மலர்ந்துள்ளது... அடிக்கடி தனிமையில் ஜாலியாகவும் இருந்துள்ளனர்.

தங்கமணி
சம்பவத்தன்று சாந்திதான் தங்கமணியையும், அவரது நண்பரையும் ஏரிக்கரைக்கு கொலை செய்ய அனுப்பி வைத்துள்ளார்.. கார்த்திகேயனை சந்தித்த தங்கமணி, ஏரிக்கரையிலேயே மது ஊற்றி தந்துள்ளார்.. போதை ஏறியதுமே கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.. தற்கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காக அவரது லுங்கியை அவிழ்த்து மரத்தில் தொங்கவிட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பரிதாப உயிர்
இதில் கொடுமை என்னவென்றால், சாந்தியின் கள்ள உறவு கார்த்திகேயனுக்கு தெரியாது.. ஒருவேளை தெரிந்துவிட்டால், இப்படி தனிமையில் இருப்பதற்கு தடையாக இருப்பார் என்று நினைத்து, அவரை முன்கூட்டியே கொன்றுவிட்டனர்... எதற்காக தன்னை அடிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள் என்றே தெரியாமல் அப்பாவி கணவர் உயிர் பறிபோய்விட்டது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications