புருஷனை வீட்டுக்குள் பூட்டி.. தீயை வைத்து உயிரோடு கொளுத்திய இளம் மனைவி.. திண்டிவனத்தில் பகீர்

கணவனை உயிருடன் எரித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்: தூங்கி கொண்டிருந்த புருஷனை வீட்டுக்குள் வைத்து பூட்டி, அப்படியே தீயையும் வைத்து கொளுத்திவிட்டார் புது பொண்டாட்டி!

திண்டிவனம் டிவி நகரை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு வயசு 24. ஒரு பஞ்சர் கடையில் வேலை பார்க்கிறார். இவர் தன் வீட்டு பகுதிலேயே வசித்து வந்த முருகவேணி என்ற 19 வயது பெண்ணை லவ் பண்ணினார்.

20 நாளைக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆனது. இவர்கள் ஒரு கூரை வீட்டில் வசித்து வந்தனர். நேத்து சாயங்காலம் சேதுபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது குப்பென்று தீப்பிடித்து வீடு எரிந்தது.

கூச்சல்

கூச்சல்

தூங்கி கொண்டிருந்த சேதுபதி கண் விழித்து பார்த்தால், வீடு முழுவதும் பற்றி கொண்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே ஓடிவர கதவை திறந்தால், கதவை யாரோ வெளிப்பக்கமாக பூட்டி இருந்தார்கள். அதனால் எதுவுமே செய்ய முடியாமல் உள்ளிருந்தே கத்தி கூச்சலிட்டார்.

கதவை உடைத்தனர்

கதவை உடைத்தனர்

அவர் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்று வேகமாக வீசியதால் தீ மொத்தமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள்.

முருகவேணி

முருகவேணி

அப்போது சேதுபதி கருகி பிணமாக விழுந்து கிடந்தார். இதையடுத்து விசாரணையை ஆரம்பித்தனர். இவ்வளவும் நடந்த சமயத்தில் முருகவேணி வீட்டில் இல்லை என்பதால் போலீசாரின் முதல் சந்தேகமும், விசாரணையும் முருகவேணியேதான்!

தகராறு

தகராறு

எதிர்பார்த்தபடியே திடுக் விஷயங்கள் வெளியே வந்தன. "எங்களுக்கு கல்யாணம் ஆனதில் இருந்தே தகராறுதான். என் மேல சந்தேகம் வேற. வேலைக்கு போகாமல் தினமும் குடிச்சிட்டு சண்டை வந்துட்டே இருந்ததால்தான் கொல்ல முடிவு பண்ணேன்.

கைது

கைது

போதையில் நேத்து சாயங்காலம் தூங்கும்போது அவர் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வெச்சிட்டு, வெளிக்கதவை பூட்டிட்டு போய்ட்டேன்" என்றார். இதையடுத்து முருகவேணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+