விழுப்புரத்தில் கேட்ட பயங்கர சத்தம்.. போலீஸ்காரர் ஏழுமலையின் நெற்றியை துளைத்த குண்டு.. ஷாக்
விழுப்புரத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.. 25 வயதாகிறது.. பிஇ பட்டதாரி.. கடந்த 2017-ம் வருடம் போலீசாக தேர்வானவர்.. இப்போது மாவட்ட எஸ்பி குடியிருப்பு முகாம் ஆபீசில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இவருக்கு டியூட்டி முடிந்துள்ளது.. அதனால், காகுப்பம் போலீஸ் குவார்ட்டஸில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பதற்காக சென்றார்.

பொதுவாக இப்படி செல்வதாக இருந்தால், முன்னதாகவே அங்குள்ள ஆயுதப்படை முகாமில் உள்ள அதிகாரியிடம், பாதுகாப்புக்கு எடுத்து சென்றிருந்த துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும், கையெழுத்தும் போட வேண்டும் என்பது விதி.. ஆனால், ஏழுமலை துப்பாக்கியை ஒப்படைக்காமலேயே குவார்ட்டசுக்கு சென்றுவிட்டார்.
நைட் ரொம்ப நேரமாகியும் ஏழுமலை ஆபீசுக்கு வரவில்லை.. துப்பாக்கியை இன்னும் கொண்டு வந்து ஒப்படைக்காமல் இருக்கிறாரே என்று அதிகாரிகள் ஏழுமலைக்கு போன் செய்தனர்.. ஆனால் ஸ்விச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு காலையில் வருவார் என்று பார்த்தார்கள்.. அப்போதும் ஏழுமலை டியூட்டிக்கு வரவில்லை.
அதனால், குவார்ட்டரிஸில் அவர் இருக்கிறாரா என்று பார்த்துவரும்படி ஒரு போலீஸ்காரரை அனுப்பி வைத்தனர்.. அவரும் உள்ளே சென்று பார்த்தால் ஏழுமலை தூங்கி கொண்டிருந்தார்.. அவரை எழுப்பி கேட்டபோது, "உடம்பு சரியில்லை.. மாத்திரை போட்டிருக்கேன்.. கொஞ்ச நேரத்தில் வரேன்" என்று சொல்லி உள்ளார். ஆனால் அதற்கு பிறகும் ஏழுமலை வரவே இல்லை.. மறுபடியும் சென்று பார்த்தபோது கதவு, ஜன்னல் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனால், ஏழுமலை பிணமாக கிடந்தார்.. அந்த ரூம் முழுவதும் ரத்தம்.. பக்கத்திலேயே துப்பாக்கி.. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. எதற்காக இவர் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்துவிட்டார் என தெரியவில்லை.
பெற்றோர்களுக்கு விஷயத்தை சொல்லவும் அவர்கள், மகனின் சடலத்தை கண்டு கதறி கதறி அழுதனர்.. ஏழுமலை ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணை நடந்து வந்தாலும், சக காவலர்கள் அதிர்ச்சியில் இன்னும் உறைந்தே உள்ளனர்.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications