கல்யாணம் ஆன அருணாதேவி.. 21 வயது ஏழுமலைக்கு ஆசை.. எல்லை மீறியதால்.. தீவைத்து எரித்த பரிதாபம்
பெண்ணை தீ வைத்து கொளுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Recommended Video
விழுப்புரம்: கல்யாணம் ஆன 28 வயதான அருணாதேவி மீது 21 வயது ஏழுமலைக்கு ஆசை. எல்லை மீறியதால், எதிர்ப்பை காட்டிய அருணாதேவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குச்சியை உரசி அவர் மீது போட்டுவிட்டார் ஏழுமலை!
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்த6வர் சின்னதுரை. இவரது மனைவி அருணாதேவி. 8 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனது. இப்போது அருணாதேவிக்கு வயது 28. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சின்னத்துரை சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்.
அதனால் அருணாதேவி தனது 2 மகன்களுடன் மாமியாருடன் வசித்து வருகிறார். போன வருடம் அண்ணன் பிரசாந்ந் தங்கையை பார்க்க வந்திருந்தார். அப்போது, அவருடன் நண்பர் ஏழுமலையும் வந்திருந்தார். ஏழுமலைக்கு வயசு 21.

செல்போன்
அருணாதேவியை பார்த்ததுமே ஏழுமலைக்கு ஆசை வந்துவிட்டது. கொஞ்ச நேரத்திலேயே செல்போனையும் வாங்கி வைத்து கொண்டு, ஊருக்கு வந்து அருணாதேவியிடம் பேச ஆரம்பித்தார். போக போக, ஏழுமலை பேச்சில் ஆபாசம், இரட்டை அர்த்தம் தெரிந்தது. அதனால் அவரை அருணாதேவி தவிர்க்க ஆரம்பித்தார். எச்சரித்தார். செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.

கட்டிப்பிடிக்க முயன்றார்
இதனால் அருணாதேவியிடம் பேச முடியாமல் தவித்த ஏழுமலை, நேராக அருணாதேவி வீட்டுக்கே சென்றுவிட்டார். அந்த நேரம் அருணாதேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இது ஏழுமலைக்கு இன்னும் சாதகமாகிவிட, அருணாதேவியை கட்டிப்பிடிக்க முயன்றார்.

அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அருணாதேவி, வீட்டிற்குள் அங்கும்இங்கும் ஓடவும் எரிச்சல் அடைந்த ஏழுமலை, அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து அருணாதேவியின் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டார். அருணாதேவி உடலில் நெருப்பு பற்றி கொண்டு எரியவும், அலறி துடித்தார். அவரை காப்பாற்ற முயல்வது போல பாசாங்கு செய்த ஏழுமலை உடலிலும் லேசான தீப்பிடித்தது.

உயிர் ஊசல்
அதற்குள் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருடன் எரித்து கொல்ல முயன்ற வழக்கில், சிகிச்சை முடிந்ததும் ஏழுமலை கைதாவார் என்று தெரிகிறது. இப்போது 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் அருணாதேவி.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications