அட.. நைட் நேரத்தில்.. இதையெல்லாமா திருடுவாங்க.. உளுந்தூர்பேட்டை போலீசாருக்கே ஷாக் தந்த இளைஞர்
எல்ஈடி பல்பு திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.. தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நிறைய கடைகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன..
இங்குள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் கடந்த சில தினங்களாக, தங்கள் கடையை அலங்கரிப்பதற்காகவும், நெடுஞ்சாலையில் பயணிப்போர் தங்கள் கடைகளை திரும்பி பார்க்கும் வகையிலும் கடைகளின் முன்பக்கம் நிறைய எல்ஈடி பல்புகளை பொருத்தி வைத்துள்ளனர்.

கடைகள்
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே, சாலையோர கடைகளில் பொருத்தப்பட்டிருந்த பல்புகள் திருடு போக ஆரம்பித்தது.. இதனால், அதிர்ச்சி அடைந்த கடை ஓனர்கள், போலீசில் இதை பற்றி தகவல் தெரிவித்தனர்... தொடர்ந்து ஒவ்வொரு கடையில் இருந்தும் ஒரே மாதிரியான புகார்கள் வரவும் போலீசாரே சற்று அதிர்ந்தனர்..

வீடியோ
இதையடுத்து, அந்த புகார்களின் பேரில் சாலையோரங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் ஒரு இளைஞர் சிக்கினார்.. அவர் பைக்கில் வந்து, ஒவ்வொரு கடை முன்பும் சிறிது நேரம் நின்றுவிட்டு செல்வதும், சுற்றி நோட்டமிடுவதும் பதிவாகி இருந்தது..

பைக்
மேலும், அங்கிருந்த ஒரு பேக்கரியில் கரண்ட்டை கட் பண்ணிவிட்டு, கடையில் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 6 பல்புகளை திருடி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.. இதையடுத்து, அந்த பைக் நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபர் யார் என்று போலீசார் விசாரித்தனர்.. அவர் பெயர் கரமத்துல்லா என்பதும், உளுந்தூர்பேட்டை மருவரசி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது... இதனையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் பல்புகளை திருடியதை ஒப்புக் கொண்டார்...

கைது
அவரிடமிருந்து ஏராளமான எல்இடி பல்புகளையும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பல்பு திருடனை கைது செய்துள்ளனர். கடை வாசல்களில் பல்புகளை திருடும் இந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.. கரமத்துல்லாவிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications