ரொமான்டிக் குரங்கிடம் மாட்டிய சிறுவன்... சிலையாக மாறியும் விடாமல் ஒரே இச்சு... வைரல் வீடியோ!
விருதுநகர்: காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் சுற்றித் திரியும் ஒற்றை குரங்கிடம் சிக்கிய ஒரு சிறுவன் சிலையாக மாறி தப்பிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் சுற்றி பலரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த குரங்கானது தெருவில் வருவோர், போவோரை துரத்தி கடித்து வருகிறது.
தற்போது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை கடித்து குதறி உள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியினரும், நாய்களும் அந்த குரங்கை பார்த்தாலே அலறி அடித்து ஓடுகின்றனர்.

வனத்துறை
குரங்கை பிடிக்க வனத்துறையினருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் கிராமத்தின் பள்ளி சுவரின் மீது அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் பாரதி அருகில் திடீரென குரங்கு வந்துள்ளது. இந்நிலையில் சிறுவனோ செய்வதறியாது சிலை போல் அமர்ந்திருந்தான்.

சேட்டை
இருப்பினும் குரங்கு அச்சிறுவனை விடுவதாக இல்லை. சுமார் 7 நிமிடங்கள் வரை அச்சிறுவனை அசைத்தும், முத்தம் கொடுத்தும் பல விதங்களில் அச்சிறுவனை அசைக்க முயற்சி செய்தது. சிறுவனோ குரங்கின் சேட்டைக்கு பிடிகொடுக்காமல் சிலை போல் அமர்ந்திருந்தான்.

வீடியோ
சிறிது நேரம் கழித்து குரங்கு தானாக சென்று விட்டது. அதனைத் தொடர்ந்து அச் சிறுவன் குரங்கிடம் இருந்து தப்பி ஓடியுள்ளான். இதனை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவன்
குரங்கிடம் பிடிபட்ட சிறுவன் அதன் கடிக்கு ஆளாகாமல் சாமர்த்தியமாக சிலை போல் நடித்தான். அந்த குரங்கு அந்த சிறுவனை அசைத்து பார்த்து பார்த்து சோர்ந்தே போய்விட்டது என சொல்லலாம். அந்த அளவுக்கு நடிப்பில் பின்னி பெடலெடுத்துவிட்டார் அந்த சிறுவன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications