சிவகாசி அருகே அரசுப்பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்! படிக்கச்சொல்லி கண்டித்ததால் ஆத்திரம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசுப்பள்ளி ஆசிரியரை 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் அரிவாளால் வெட்டிய நிகழ்வு பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தங்கல் எஸ்.ஆர்.என்.அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக இருப்பவர் கடற்கரை. இவர் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எக்னாமிக்ஸ் வகுப்பு எடுத்து வருகிறார். இந்நிலையில் அரையாண்டு தேர்வு நெருங்குவதால் 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை படிக்கச் சொல்லி கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 மாணவர்களும் ஆசிரியர் கடற்கரையை தாக்க திட்டமிட்டு வீட்டிலிருந்தே அரிவாளை எடுத்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வகுப்பில் நடத்திய பாடத்தை படித்து விட்டு வந்திருக்கீங்களா இல்லையா என ஆசிரியர் கடற்கரை மாணவர்கள் இருவரிடமும் வினவி கண்டித்திருக்கிறார். இதையடுத்து பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆசிரியர் கடற்கரை தலையில் ஒரே போடாக போட்டு வெட்டி விட்டு அவர்கள் பள்ளியை விட்டு தப்பியோடியிருக்கின்றனர்.
இதையடுத்து தலையில் வெட்டுக்காயத்துடன் திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆசிரியர் கடற்கரைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தலையில் கட்டு போட்டுவிட்டனர். இதனிடையே இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் போலீஸார் ஆசிரியர் கடற்கரை மற்றும் பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களிடம் நடந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கச் சொல்லி கண்டித்ததால் ஆசிரியர் தலையை மாணவர்கள் பதம் பார்த்த நிகழ்வு தமிழகம் தழுவிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ஒரு காலத்தில் ஆசிரியர்களை பார்த்தாலே ஊரில் ஓடி ஒளிந்த காலமெல்லாம் மலையேறி, இன்று ஆசிரியரையே தாக்கும் அளவுக்கு காலங்கள் மாறிவிட்டது. ஆசிரியர்களை எதிர்த்து பேசினால் நமது மதிபெண்களில் கைவைத்து விடுவார்களோ என்று அஞ்சியவர்கள் 90s கிட்ஸ். ஆனால் 2k கிட்ஸோ எதற்கும் துணிந்தவர்களாக ஆசிரியர்களையே என்னவென்று கேட்கும் அளவுக்கு இருக்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications