17 உனக்கு, 33 எனக்கு.. சிறுவனுடன் பெண் ஓட்டம்.. கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்காம்.. பேர் "மகாலட்சுமி"

17 வயது சிறுவனுடன் 33 வயது பெண் ஓட்டம் பிடித்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 33 வயது பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், இந்த சம்பவம் குறித்து, 2 விதமான கேள்விகளும் முளைத்து கிளம்பி உள்ளன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தாட்கோ காலனியை சேர்ந்த கார்த்திக்.. இவரது மனைவி மகாலட்சுமி.. 33 வயதாகிறது.. இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

இதே சூளையில் 17 வயது வேலை பார்த்து வந்துள்ளான்.. அந்த சிறுவனுடன் மகாலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது... பிறகு அதுவே நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறி உள்ளது..

 கரைந்த மனசு

கரைந்த மனசு

வேலை பார்க்கும் நேரத்தில்கூட, சிறுவனுடன் மகாலட்சுமி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இதைதவிர, லீவு நாட்களில் இருவருமே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்... ஒருகட்டத்தில் சிறுவனை பிரிந்திருக்க மகாலட்சுமிக்கு மனமில்லை.. அதனால், எங்காவது போய், சிறுவனுடன் நிம்மதியாக வாழலாம் என்று மகாலட்சுமி யோசித்தார்.. இதற்காக சிறுவனிடம் மெல்ல மெல்ல பேசி அவன் மனதை சம்மதிக்க வைத்துவிட்டார் மகாலட்சுமி.. அதன்படி, கடந்த 19ம் தேதி சிறுவனுடன் ஓட்டம் பிடித்தார் மகாலட்சுமி.. சிறுவனை வீட்டில் காணாமல் அவனது பெற்றோர் பதறிவிட்டனர்..

 எஸ்கேப்

எஸ்கேப்

இதனால் போலீசுக்கு ஓடினார்கள்.. அதேபோல, மகாலட்சுமியின் கணவரும், மனைவியை காணவில்லை என்று சேத்தூர் போலீசில் புகார் தந்தார்.. இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். அப்போதுதான், 2 பேரும் கன்னியாகுமரியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.,. இதையடுத்து, அங்கு விரைந்து சென்று, 2 பேரையுமே சேத்தூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. மகாலட்சுமியை போக்சோ சட்டத்தில் கைது செய்ததுடன், சிறுவனுக்கும் கவுன்சிலிங் தந்து, அதன்பிறகு, பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

சில்மிஷம்

சில்மிஷம்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, அந்த சிறுவன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டான்.. அதனால் வேலைக்கு சென்று வந்துள்ளதாக தெரிகிறது.. சிறுவனுடன் பழகிய 33 வயது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இவர்கள் வெளியூருக்கு தப்பி சென்றுவிட்ட நிலையில், இது குறித்து இருவேறு போலீஸ் ஸ்டேஷனில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் விசாரணை ஆரம்பமானது. இருவரையும் கன்னியாகுமரியில் இருந்து மீட்டு அழைத்து வந்ததுடன், அந்த பெண்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். பெற்றோர்கள் விருப்பத்தின்பேரில், ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கிவிட்டு சிறுவன் அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்" என்றனர்.

 2 கேள்விகள்

2 கேள்விகள்

இந்த சம்பவமானது 2 விதமான கேள்விகளை கிளப்பி விட்டு வருகிறது.. "சிறுவன் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார் என்றால், அவரை குழந்தைகள் நல கமிட்டி முன்பு ஆஜர்படுத்தி முறையான உளவியல் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, பெற்றோர்கள் விருப்பத்தின்பேரில் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாமா? என்று சிலர் கேட்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, 17 வயது சிறுவன் சூளையில் வேலைக்கு சென்றிருக்கிறார் என்றால், விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னமும் ஒழியவில்லையா? என்றும் கேள்விகள் பிறந்துள்ளன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+