கண்ணை மறைத்த தாயின் கள்ளக்காதல்.. 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கஞ்சா ஆசாமி!
விருதுநகர்: 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை கேரளா போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் அலெக்ஸுக்கு கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணுக்கு திருமணமாகி 5 வயதிலும், 3 வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களது கள்ளக்காதலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் மனைவியை எச்சரித்துள்ளார்.

கண்ணை மறைத்த கள்ளக்காதல்
ஆனால் அலெக்ஸ் மீதான கள்ளக்காதல் அந்த பெண்ணின் கண்ணை மறைத்தது. இதனால் கணவருடன் வசித்தால் கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அந்த பெண் தனது 5 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.

கேரளாவில் வீடு
இந்த நிலையில் அந்த பெண்ணையும், 5 வயது குழந்தையையும் அலெக்ஸ் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த குழந்தையை தன் குழந்தை போல் வளர்ப்பதாகவும் அலெக்ஸ் வாக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரையும் அழைத்துக் கொண்டு கேரளாவில் உள்ள பத்தினம்திட்டாவில் வீடு எடுத்து மூவரும் தங்கியுள்ளனர்.

போதைக்கு அடிமை
ஆனால் அலெக்ஸ் வேலைக்கே செல்லாமல் கஞ்சா, போதை மயக்கத்தில் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் வீட்டுச் செலவிற்காக அந்த பெண் தனது குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அந்த பெண் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது வீட்டில் 5 வயது சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

குழந்தை பலி
இதனால் அதிர்ந்த அந்த பெண் உடனடியாக மகளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். உடல் முழுவதும் காயமிருந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.

பரபரப்பு
போதையில் சிறுமியை பலாத்காரம் செய்ததை அலெக்ஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். தாயின் கள்ளக்காதல் மோகத்தால் பிஞ்சு குழந்தை காமக்கொடூரனின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications