வாயில் பஞ்சு.. 8 வயது சிறுமியை காட்டில் சீரழித்த கும்பல்.. அசாம் இளைஞர் கைது.. உலுக்கும் சிவகாசி
சிவகாசி: வாயில் பஞ்சை வைத்து.. மொத்தம் 6 பேர் 8 வயது குழந்தையை நாசம் செய்து நடுக்காட்டில் வீசிவிட்டு போயுள்ளனர்... இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் உட்பட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள கிராமம் கொங்கலாபுரம்... இங்கு வசித்து வருபவர் சுந்தரம்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவரது 8 வயது மகள் பிரித்திகா.. அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சாயங்கால நேரங்களில் ஸ்கூல் முடிந்ததும், பிரித்திகா அப்பா வேலை செய்யும் இடத்துக்கு சென்றுவிடுவாள்.. அதன்பிறகு சுந்தரம் மகளை தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேருவார். அப்படித்தான், 3 நாளைக்கு முன்பு குழந்தை ஸ்கூல் முடிந்து வருவாள் என்று தந்தை காத்து கொண்டே இருந்தார்.. ஆனால் வரவே இல்லை.. ஸ்கூலில் இருந்து கிளம்பும்போது அப்பாவை பார்ப்பதாக சொல்லிவிட்டுதான் கிளம்பினாளாம்.. வீட்டுக்கும் போகவில்லை.

சிவகாசி போலீஸ்
அதனால் பயந்துபோன சுந்தரம் மகளை பல இடங்களில் தேடினார்.. எங்குமே பிரித்திகா கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்யவும், அவர்களும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விடிகாலையில் சித்துராஜபுரம் என்ற காட்டுப்பகுதியில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்தனர்.. அது காணாமல் போன பிரித்திகாதான்.

பிணமாக கிடந்த சிறுமி
உடம்பெல்லாம் காயங்களுடன் பிணமாக கிடந்தாள்.. வாயில் பஞ்சை வைத்து அடைத்துள்ளனர் குரூர்கள்.. மர்ம நபர்கள் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, அதன்பிறகு கொடூரமாக கொன்று நடுக்காட்டில் வீசிவிட்டு போயிருந்தனர்.

கண்டனங்கள்
இந்த சம்பவம் விருதுநகரையே நிலைகுலைய வைத்தது.. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குழந்தை பிரித்திகாவை கொன்றவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.. போலீசாரும் 5 தனிப்படை அமைதுது, கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற க்ளு இல்லாமல் தவித்தனர்.. ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்டோர்தான் இந்த வேலையை செய்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

வலுத்த சந்தேகம்
அப்போதுதான், அந்த பகுதியில் வட மாநில இளைஞர்கள் நிறைய பேர் தங்கி, பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருவதால், போலீசாருக்கு லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் முக்கியமான குற்றவாளி சிக்கினார்.. பெயர் மஜம் அலி.. 20 வயது இளைஞர்.. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.

கிடுக்கிப்பிடி விசாரணை
மாவட்ட எஸ்பியே நேரடியாக இதில் இறங்கி மஜம் அலியிடம் விசாரித்து வருகிறார்.. இதில் மேலும் 5 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிகிறது.. அதனால் அவர்களையும் பிடித்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். செல்போனில் ஆபாச வீடியோ வைத்திருந்தாலே கைது என்று போலீசார் எச்சரித்து வருகின்றனர்.. ஆனால் உலகமே அறியாத இந்த பிஞ்சுகளின் கொடூரமான பாலியல் பலாத்கார கொலைகளை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications