காட்டுக்குள் தனிமை.. பார்த்துவிட்ட சிறுவன்.. விருதுநகர் கள்ளக்காதல் ஜோடி அடுத்தடுத்து விபரீத முடிவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி என்ற கிராமத்தில் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்து விட்டதால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணத்தை மீறி காதல் உறவுகள், கள்ளக்காதலாக இன்று பல ஊர்களில் தொடர்கிறது. ஒருவரை திருமணம் செய்த பின்னர் திடீரென இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த காதல் காமம் சார்ந்ததாக இருக்கிறது. இந்த காதலை வெளியில் சொல்லவும் முடியாமல், கணவன், குழந்தைகளை பிரியவும் முடியாமல் தொடர்கிறார்கள். இது கடைசியில் கொலை, தற்கொலையில் தான் முடிகிறது.

எங்கோ ஒரு மூளையில் தான் சரியான முறையில் விவகாரத்து பெற்று முறைப்படி சேர்ந்து வாழ்கிறார்கள். மற்றபடி கள்ளக்காதல்கள் விபரீதத்தில் தான் போய் முடிகிறது. அப்படித்தான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முடிந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருடைய மனைவி அமுதா (வயது 40). இவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (40). இவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருக்கும், அமுதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் அமுதாவை காட்டுப்பகுதிக்கு வரவழைத்து ராமமூர்த்தி அடிக்கடி ஜாலியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு காட்டுப்பகுதியில் இருவரும் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, திடீரென அங்கு வந்த ஒரு சிறுவன் இதை பார்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.
சிறுவன் வெளியில் சொல்லி விடுவானோ என்று பயந்த அமுதா மனவருத்தம் அடைந்து திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து அமுதாவை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அமுதா சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.
கள்ளக்காதலி தற்கொலை செய்துகொண்டதை அறிந்த ராமமூர்த்தியும் விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்தியின் மனைவி பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரிலும், அமுதாவின் கணவர் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரிலும் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications