Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'யார்ரா அவன் முரட்டு ஆளா இறங்கி ஓடிக்கிட்டு இருக்கான்'.. ராஜபாளையம் ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது, திடீரென ஒரு இளைஞர், அபாய சங்கிலியை இழுத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். எதற்காக அப்படி செய்தார் என்பதை பற்றி பார்ப்போம்.

ரயிலில் செல்வோர் சில சமயங்களில் இறங்கவேண்டிய ரயில் நிலையத்தை தவற விடும் சூழல் ஏற்படுகிறது. அப்படி தவற விட்டால் அடுத்த ஸடேசனில் தான் போய் இறங்க வேண்டும். உதாரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் இறங்காமால் விட்டால், அடுத்த 100 கிமீ தூரத்தில் உள்ள திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தான் இறங்க வேண்டும். இடையில் எந்த ரயில் நிலையத்திலும் பல ரயில்கள் நிற்காது. திருச்சி திண்டுக்கல் ரயில் வழித்தடம் போல், ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை வழித்தடத்திலும் ரயில்கள் நீண்ட தூரம் தள்ளித்தான் நிற்கும்.

train Pothigai express

இந்நிலையில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் நேற்று காலை 6.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு இரண்டொரு நிமிடம் நின்றிருந்த இ்ந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி உள்ளார்கள்.. அதனைத் தொடர்ந்து ரயில் புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டு இருந்தது.

ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சென்றபோது திடீரென அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால், என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து ரயிலை நிறுத்தினார். ரயில் நின்றதும் ஒரு பெட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயில் பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடினார். இது பயணிகளை அதிர்ச்சி அடைந்தனர்

ரயில் பெட்டியில் பயணிகளிடம் திருடிவிட்டு, அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திவிட்டு அந்த நபர் ஓடுவதாக வேகமாக தகவல் பரவியது. ரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்கு வந்து, பயணிகளிடம் விசாரித்தனர். அப்போது, ராஜபாளையத்தில் இறங்க வேண்டிய அந்த வாலிபர் தூங்கிக்கொண்டு இருந்ததாகவும், ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு ரயில் புறப்பட்டு சென்றபின் எழுந்த அந்த வாலிபர், இறங்க வேண்டும் என்ற அவசரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியது தெரியவந்தது.

இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த இளைஞர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இளைஞரின் இந்த செயலால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களும் சற்று தாமதமாகவே வந்து சென்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+