அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
அதிமுக மகளிரணி மாவட்ட நிர்வாகி விபச்சார வழக்கில் சிக்கியிருப்பது ஷாக் கொடுத்துள்ளது.
விருதுநகர் : விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி துணைத் தலைவியும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியாக வாடகைக்கு வீடு பிடித்து இளம்பெண்களை வைத்து விருதுநகர் அதிமுக மாவட்ட மகளிரணி தலைவர் அமல்ராணி பாலியல் தொழில் செய்து வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் உள்ள ஒரு வீட்டில் புதிது புதிதாக சிலர் வந்து போவதாக தகவல் வந்த நிலையில், போலீசார் அதிரடி ரெய்டில் இறங்கினர். அப்போது மாட்டிய இளம்பெண்ணிடம் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதிமுக மாவட்ட மகளிரணி துணைத் தலைவி தனது கணவருடன் சேர்ந்து விபச்சார தொழில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதிமுக மகளிர் அணி தலைவி
விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). இவரது மனைவி அமல்ராணி (40). அமல்ராணி விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணை தலைவியாக உள்ளார். கணவன், மனைவி இருவரும் விருதுநகர் பேராலி ரோடு ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டை புதிதாக வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக விபச்சாரம் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

போலீஸ் ரெய்டு
இதனைத் தொடர்ந்து ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீசார் நேற்று இரவு அந்த வீட்டிற்கு திடீரென சென்றனர். அந்த வீட்டில், ஒரு பெண்ணும் ஆணும் தனிமையில் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அங்கு விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்தது.

சிக்கிய இளம்பெண்
போலீசார் சென்றபோது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் சாத்தூர் மேட்டமலையைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் என்றும், அங்கிருந்த ஆண் சிவகாசியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த இளம்பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி, மற்றும் அவரது கணவர் சந்திரசேகரன் ஆகியோர், அங்கு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
இதையடுத்து, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி, மற்றும் அவரது கணவர் சந்திரசேகரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களது காரையும் பறிமுதல் செய்தனர். விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக்












Click it and Unblock the Notifications