திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலே பதில்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிப்புத்தூர்: திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்றும் குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார் .

மேலும், சுயேச்சையைப் போல் அமமுக களத்தில் உள்ளது. கமல்ஹாசன் களத்தில் இல்லை என்றும் காணொளி காட்சி மூலம் தேர்தலை முடித்துக்கொள்வர் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தெரிவித்தார்.

AMMK like an independent; Minister Rajendra Balaji Citicism

அதிமுக, திமுக இடையே தான் பேட்டி எனவும் அவர் பேசினார். அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் இடையே எந்தவித மோதலும் இல்லை என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக - திமுக தான் களத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த தேர்தல் முதல்வரின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்தும் தேர்தலாகும் என்றும் ராஜ கண்ணப்பன் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டு தான் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+