தோண்ட தோண்ட வெளிவரும் வரலாறு.. விருதுநகர் மண்ணில் கிடைத்த பொக்கிஷம்! தமிழர்கள் அப்பவே அப்புடி!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 3-ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 2600க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வாய்வு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கீழடியில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்டு தற்போது அங்கு கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகு சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் வடிவமைப்பு கலையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டது.
இதேபோல், பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய முன் கையில், வலம்புரிச் சங்கால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள் பெண்ணொருத்தி என்று நெடுநல்வாடை நூல் கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில், பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் 3ம் கட்ட அகழ்வாய்வில் 16 குழிகளில் தோண்டப்பட்டு உடைந்த நிலையில் ஆன சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அகவாழ்வு இயக்குனர் பாஸ்கர், 3-ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் சங்கு வலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது மூலமாக முன்னோர்கள் அணிகலன்களுக்கும் அழகிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications