Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காருக்குள்ளேயே சுற்றி வந்த எதிர்வீட்டு முத்துச்செல்வி.. 4 பேருடன் சேர்ந்து.. விருதுநகர் ஷாக்

நகைகளை கொள்ளையடித்த பெண் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: 28 வயது முத்துச்செல்வி காரில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதை பார்த்ததுமே போலீசாருக்கு சந்தேகம் வந்தது.. இறுதியில் இப்போது அந்த பெண் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

அருப்புக்கோட்டை கணேஷ்நகரை சேர்ந்தவர் ஜெயகிருபா.. கடந்த 10-ம் தேதி இவர் வீட்டுக்கு 4 பேர் வந்திருந்தனர். 4 பேருமே இளைஞர்கள்.. அவர்கள் கையில் கல்யாண பத்திரிகை இருந்தது. வீட்டில் யாருமே இல்லை.

Aruppukkottai robbery and 5 arrested

பத்திரிகை கொடுப்பது போல உள்ளே நுழைந்தவர்கள், திடீரென ஜெயகிருபாவின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டனர்.. பிறகு வீட்டில் இருந்த 35 சவரன் நகை, பணம், ஜெயகிருபா கழுத்தில் கிடந்த நகை என எல்லாவற்றையும் எடுதுதுக் கொண்டு ஓடிவிட்டனர்.

இது சம்பந்தமாக விசாரணையை போலீசார் விசாரிக்க தொடங்கினர்.. அங்கிருந்த சிசிடிவி காட்சியையும் ஆராய்ந்தனர்.. அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் அடிக்கடி, ஜெயகிருபா வீட்டு பக்கம் காரில் சுற்றிக் கொண்டே இருப்பது பதிவாகி இருந்தது.. வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை அடித்ததும் இதே நபர்தான் என்பதும் உறுதியானது.

அந்த காரில் முத்துச்செல்வி என்பவரும் உடனிருந்தார். அப்போதுதான், இதற்கெல்லாம் காரணம் முத்துச்செல்வி என்பது தெரியவந்தது.. அவர்தான் இந்த கொள்ளை கும்பலின் கேங் லீடர்.. 28 வயசாகிறது.. ஜெயகிருபாவின் எதிர்வீட்டில் வசிப்பவர்.. ஜெயகிருபாவின் நெருங்கிய தோழியும் கூட..

சில தினங்களுக்கு முன்பு, "இவ்வளவு நாள் அடகு வைத்த நகையை இப்போதுதான் மீட்டு கொண்டு வந்தேன்" என்று தோழியிடம் சந்தோஷமாக சொல்லி உள்ளார் ஜெயகிருபா.. ஏற்கனவே பணத்தேவையில் தவித்து கொண்டிருந்த தோழி, இதையே சாக்காக பயன்படுத்தி கொண்டார்.. கொள்ளையடிக்க 4 பேரை தயார் செய்தார்.
கணேஷ்குமார், சோலைச்சாமி, அருண்பாண்டியன் ஆகியோரை, ஜெயகிருபா மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை பார்த்து, கையில் ஒரு கத்தியும் தந்து அனுப்பி வைத்துள்ளார்...

இப்போது கொள்ளையடித்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டன. இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.. அனைவருமே கம்பி எண்ணி கெண்டிருக்கிறார்கள்.. ஆனால், கொள்ளையடித்தது நகைகள் மட்டுமே என்றாலும், அதற்காக ஒரு காரையே பறிகொடுத்துவிட்டனர் இந்த கொள்ளையர்கள். கேங் லீடர் முத்துச்செல்வி & கோவிடம் தீவிரமான விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+