அருப்புக்கோட்டையில் பெட்ரோல் போட்டால் அற்புதமான ஆஃபர்.. முண்டியடிக்கும் வாகன ஓட்டிகள்
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் ரூ 50 க்கு பெட்ரோல் இலவசம் என்ற ஆஃபர் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையை அன்றாடம் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில் லிட்டருக்கு ரூ 100- ஐ பெட்ரோல் விலை தாண்டியதால் வாகனங்களுக்கு பெட்ரோல் போட பணம் இல்லாமல் ஏழை, நடுத்தர மக்கள் தவிக்கிறார்கள்.

இரு சக்கர வாகனங்கள்
இரு சக்கர வாகனங்களிலேயே வேலை நிமித்தமாக பயணிக்கும் நபர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ 100 க்கு பெட்ரோல்
அந்த வகையில் வாகனங்களுக்கு ரூ 100க்கு பெட்ரோல் போட்டால் ரூ 1 தள்ளுபடி என டோக்கன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த நிறுவனம் வழங்கும் 50 சிறப்பு டோக்கன்களை கொடுத்துவிட்டு 50 ரூபாய்க்கு பெட்ரோலை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

வாகன ஓட்டிகள் ஆர்வம்
இதனால் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பெட்ரோல் நிரப்பி வருகிறார்கள். அது போல் ரூ 1000 த்திற்கு டீசல் நிரப்பினால் 50 பைசா தள்ளுபடி என டோக்கன் வழங்கப்படுகிறது. இதையடுத்து கணிசமாக சேர்த்து கொடுத்தால் டீசல் விலையில் தள்ளுபடி பெறலாம்.

புதிய சலுகையால் குவியும் மக்கள்
இந்த புதிய சலுகையால் இந்த பெட்ரோல் பங்கில் தினந்தோறும் வாகன ஓட்டிகள் குவிந்தவண்ணம் உள்ளார்கள். இது போன்று மற்ற பெட்ரோல் பங்க்களிலும் சலுகைகள் வழங்கினால் வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்பதே பொதுவான கருத்தாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications