அண்ணாமலை சொல்கிறார்! ஸ்டாலின் செய்கிறார்! ரஜினிகாந்தின் அருணாச்சலம் படம் பாணியில் பேசும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அண்ணாமலை சொல்கிறார், ஸ்டாலின் செய்கிறார் என நடிகர் ரஜினிகாந்தின் அருணாச்சலம் படம் பாணியில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் சின்சியராக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விளக்கமளித்த அவர், பிரதமர் தமிழகம் வந்து சென்ற பின்னர் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

விருதுநகரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

போராட்டம் உறுதி

போராட்டம் உறுதி

''தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பெட்ரோல், டீசல், விலையை
குறைக்காவிட்டால் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார். பிரதமர் தமிழகம் வந்து சென்ற பின் நிச்சயம் முற்றுகைபோராட்டம் நடத்துவோம். தமிழக நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கமுடியாது என்று கூறியுள்ளார். ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்தவாக்குறுதியை ஓராண்டாகியும் திமுக அரசு நிறைவேற்றாமல் இருப்பதற்கு காரணம்
மக்களை ஏமாற்றும் நோக்கமே தவிர வேறு அல்ல.''

அண்ணாமலை சொல்கிறார்

அண்ணாமலை சொல்கிறார்

''அண்ணாமலை சொல்கிறார் அதனை ஸ்டாலின் செய்கிறார். திருவாரூர் ரத விதியை
கருணாநிதி வீதி என்று மாற்றுவதை தடுத்தோம்.
பட்டின பிரவேசம் நடத்த அனுமதி கிடையாது எனக் கூறியதும், நாங்கள் அதைச்செய்கிறோம் என்றவுடன் அதனை மீண்டும் திமுக அரசு அனுமதிக்கிறது. ஆம்பூர்பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி கடை போடக்கூடாது என நாங்கள்
கூறியவுடன் அதனையும் தவிர்த்தது தமிழக அரசு.''

திராணி இல்லை

திராணி இல்லை

'பாஜகவில் சீனியர்கள், சின்சியராக உழைப்பவர்கள் மற்றும் மாற்றுகட்சிகளில்
இருந்து இணைத்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம்.பேரறிவாளன் விடுதலையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற போதிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். மேலும் 6 பேரின் விடுதலையைஎதிர்க்கிறோம். பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயை கட்டிக்கொண்டுகாங்கிரஸ் போராட்டம் நடத்துகிது. திமுக அரசை எதிர்த்து பேச கூட திராணிஇல்லாத கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.''

பாஜக தான் எதிர்க்கட்சி

பாஜக தான் எதிர்க்கட்சி

'நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்க்கு கிடைத்தஒவ்வொரு ஓட்டும் திமுக போட்ட பிச்சை. சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 4
எம்.எல்.ஏ.க்கள் தான் என்றாலும், மக்கள் மன்றத்தில் பாஜக தான் பிரதானஎதிர்கட்சி. இந்தியாவில் பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சியையும் தவிர வாரிசுஅரசியல் இல்லாத கட்சிகளே இல்லை.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+