மோடிக்கு ஒரே மாற்று ராகுல்தான்.. சீறிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு.. விருதுநகரில் நடந்த பரபர ஆலோசனை
விருதுநகர்: திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு இந்தியாவின் அனைத்து மாநிலக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் உண்டு என கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் மேற்குறிப்பிட்டவாறு அவர் பேசியுள்ளார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீதும் விமர்சனம் வைத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் எனவும் தனது உரையில் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில், கட்சியின் நிலைமை சற்று தள்ளாடி வருகிறது. இதற்கிடையில் கட்சியை பலப்படுத்தும் பணியில் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசிய கட்சியின் எம்பி திருநாவுக்கரசு, மாநில கட்சிகள் குறித்து விமர்சித்து பேசினார்.
அதாவது இந்தியாவின் அனைத்து மாநில கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "இந்தியாவில் வாரிசு அரசியல் இல்லாத கட்சிகள் இல்லை. எல்லாக் கட்சிகளுக்கும் வாரிசுகள்தான் தலைவர்களாக உள்ளனர். ஆனால் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையென்று சொல்லலாம். இல்லைதான். ஏனெனில் அக்கட்சியின் தலைவர்களாக இருந்த வாஜ்பாய் திருமணம் செய்துகொள்ளவில்லை. மோடிக்கும் அதே நிலைதான்"என்று கூறியுள்ளார்.
அதேபோல பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை கடுமையாக விமர்சித்த திருநாவுக்கரசு, "மோடிக்கு சரியான மாற்று என்றால் அது ராகுல் காந்திதான். மோடிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் ராகுல் காந்திதான். மோடி யாரை பார்த்து பயப்படுகிறார் என்றால் அது ராகுல் காந்தியை பார்த்து மட்டும்தான். அதனால்தான் அவர் மீது தொடர் அரசியல் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. காய்த்த மரத்தில்தான் கல்லடி விழும்" என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய குலாம் நபி ஆசாத், "கட்சி சீரழிவுக்கு ராகுல் காந்திதான் முழுக்க முழுக்க காரணம்" என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்த் சர்மாவும் ராகுல் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் என திருநாவுக்கரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications