“பேஷ் பேஷ் மாமா”.. ராஜேந்திர பாலாஜி போட்டு கொடுத்த டீயை குடித்த விஜய பிரபாகரன் ரியாக்ஷனை பாருங்க!
விருதுநகர்: தேர்தல் பரப்புரையின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டுக் கொடுத்த டீயை குடித்துவிட்டு விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார். விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில், ராஜேந்திர பாலாஜி தானே டீ போட்டு வேட்பாளர் விஜய பிரபாகர் மற்றும் கட்சியினருக்கு கொடுத்தார்.
ராஜேந்திர பாலாஜி போட்டுக் கொடுத்த டீயை குடித்த விஜய பிரபாகரன், "பேஷ் பேஷ் மாமா" என கிண்டலாகக் கூறினார். இதையடுத்து, அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் சிரித்தனர். ராஜேந்திர பாலாஜி போட்ட டீயை, அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் பலரும் ரசித்து குடித்தனர். இதையடுத்து தொடர்ந்து அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராகச் செயல்பட்டார். இந்நிலையில், விருதுநகரில் டீ கடையில் தானே டீ போட்டு சூடாக நிர்வாகிகளுக்கு கொடுத்து பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அப்பகுதியினர் வியந்து பார்த்தனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications