Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பக்கா வியூகம்!.. 10 ஆண்டு காத்திருப்பு.. முதல்முறையாக விருதுநகர் நகராட்சியை தன் வசமாக்கிய திமுக!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் உள்ள வார்டுகளில் 20இல் திமுக வென்று முதல்முறையாக அந்த நகராட்சியை தன் வசமாக்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்ரில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் (சில மாவட்டங்களில் தனித்து போட்டி), அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.

விருதுநகர் நகராட்சி

விருதுநகர் நகராட்சி

விருதுநகர் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இங்கு திமுக 20 வார்டுகளிலும் காஙகிரஸ் 8 வார்டுகளிலும் அதிமுக 3வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் விருதுநகர் நகராட்சி முதல்முறையாக திமுக வசமாகிறது.

 36 வார்டுகளில்

36 வார்டுகளில்

திமுக 1, 2, 4, 5, 7, 9, 10 உள்ளிட்ட வார்டுகளில் திமுக வென்றுள்ளது. அது போல் அமமுகவும் சில வார்டுகளில் வென்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் நகராட்சி அதிமுக வசமானது. இந்த முறை 36 வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது. திமுக 23 வார்டுகளிலும் காங்கிரஸ் 11 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் 2 வார்டுகளிலும் போட்டியிட்டது.

விருதுநகர் நகராட்சி

விருதுநகர் நகராட்சி

இந்த முறை விருதுநகர் நகராட்சியை கைப்பற்ற திமுக வியூகம் வகுத்தது. இதனால் நகர்மன்றத் தலைவர் பதவி யாருக்கு என்பதில் திமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று விருதுநகர் நகர்மன்ற தலைவராக பொறுப்பு வகித்தவர் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜாவின் மனைவி கார்த்திகா கரிக்கோல்ராஜ் இந்த முறை 35 ஆவது வார்டில் சுயேட்சையாக களம் இறங்கினார்.

 காங்கிரஸ் சார்பில்

காங்கிரஸ் சார்பில்

2006 இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வென்ற பாலகிருஷ்ணசாமிக்குதான் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு என அப்போது திமுக கூட்டணியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கவுன்சிலர்களை தனக்கு ஆதரவாக திரட்டிய கார்த்திகா நகர்மன்றத் தலைவரானார். இந்த முறை விருதுநகர் நகராட்சியை திமுக தன்வசமாக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+