விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன பெருஞ்சுவர் இருக்கே! சேது சமுத்திர திட்டம் நமது பாரம்பரியம்.. தொடக் கூடாது! தடலாடி கிருஷ்ணசாமி!

Google Oneindia Tamil News

விருதுநகர் : சேது சமுத்திர திட்டம் என்பது பாரம்பரியம் தொடர்புடையது. இமயமலை போல் ராமர் பாலமும் இந்தியாவின் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க அடையாளம் எனவும், பாரம்பரியம் என்றால் அதை தொடக்கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 500 பொது மக்களுக்கு புத்தாடைகளை டாக்டர் கிருஷ்ணசாமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர்," தமிழ் சமுதாயத்தை ஒற்றை அடையாளப்படுத்துவதற்கு இன்று ஆட்சியில் இருக்கக்கூடிய திராவிட கட்சிகள் தவறிவிட்டனர். அந்த விஷயத்தில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டனர்.

திமுக மா.செ 'லிஸ்ட்’டில் இருப்பவர்களுக்கு தான் வேலையா? என்ன இப்படி பேசுறாரு? கொதிக்கும் கிருஷ்ணசாமி! திமுக மா.செ 'லிஸ்ட்’டில் இருப்பவர்களுக்கு தான் வேலையா? என்ன இப்படி பேசுறாரு? கொதிக்கும் கிருஷ்ணசாமி!

டாக்டர்.கிருஷ்ணசாமி

டாக்டர்.கிருஷ்ணசாமி

70 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிட கட்சிகளால் தமிழர்களை திராவிடர் என்ற பெயரில் ஒற்றுமைப்படுத்த இயலவில்லை மாறாக மக்களுக்கு இடையில் ஜாதி என்னும் பிரிவால் மிகப் பெரிய அளவில் பிளவு படுத்தி விட்டனர். திராவிட கட்சிகளால் ஒற்றுமைப்படுத்த முடியாத தமிழ் சமுதாயத்தை ஒற்றுமை படுத்துவதற்கு உண்டான முன்னோடி நிகழ்வாக இந்த பொங்கல் விழா அனுசரிக்கப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என். ரவி

ஆளுநர் ஆர்.என். ரவி

பல்வேறு ஜாதிகளுக்கு மத்தியில் இருக்கக்கூடிய மன கசப்புகளை அகற்றி வேறுபாடுகளை அகற்றி ஒரு தாய் மக்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் புதிய தமிழகம் கட்சியின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டம். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் குடியரசு தலைவரிடம் முறையிட்டதில் இருந்து தமிழ்நாட்டிற்கு மேல் மத்திய அரசு என்று ஒன்று இருப்பதை அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

புதிய தமிழகம்

புதிய தமிழகம்

ஆளுநர்தான் இவர்களை ஆட்டிப் படைக்க வேண்டும் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள். முதலில் தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு மாநிலம்தான் தமிழ்நாடு. இது தனி நாடு கிடையாது. தமிழகம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு அதற்காகத்தான் புதிய தமிழகம் என்று பெயர் வைத்துள்ளோம். ஆளுங்கட்சியான திமுக கட்சி பெயரில் தமிழகம் என்ற பெயரை இணைப்பதற்கு ஏன் தயங்குகிறது.

திராவிடம்

திராவிடம்

திராவிடம் என்ற பெயரை வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்யக்கூடாது. தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதில் எந்த தவறும் கிடையாது. கட்சிக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டாத திமுக ஆளுநர் தெரிவித்த தமிழகம் என்ற பெயர் குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பொங்கலிடக்கூடிய பொருட்கள் தொகுப்புடன் ரூபாய் 2500 வழங்கிய போது ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின் அவர்கள் தற்போது புத்தாடை பொங்கல் தொகுப்பு எதுவும் இல்லாமல் ரூபாய் 1000 மட்டும் வழங்கியுள்ளார்.

 பொங்கல்

பொங்கல்

இது தமிழக மக்களுக்கு போதுமானதாக இருக்காது. இந்த பணம் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பயன்படும். எனவே தற்போது உள்ள விலை வாசியை பொறுத்தவரை பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்பதே புதிய தமிழகத்தின் நிலைப்பாடு. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மக்களின் வாழ்வு நிலை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. தரைமட்டமாகி கொண்டு வருகிறது.

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம் என்பது பாரம்பரியம் தொடர்புடையது. இமயமலை போல் ராமர் பாலமும் இந்தியாவின் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க அடையாளம். சீனப் பெருஞ்சுவர் பைசா சாய்ந்த கோபுரம் தாஜ்மஹால் உள்ளிட்ட கட்டடங்கள் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றால் ராமர் பாலம் என்பது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருக்கலாம். 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல்வேறு நினைவு சின்னங்கள் இன்னும் உறுதியுடன் இருக்கும் போது ஏன் மனித சக்தி மூலம் சுமார் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டியிருக்க முடியாது. இதை யாரும் இல்லை என்று சொல்லக்கூடாது. பாரம்பரியம் என்றால் அதை தொடக்கூடாது" என்றும் தெரிவித்தார்.

English summary
Sethu Samudra Project is associated with tradition. Puthiya Tamilagam Party President Dr. Krishnasamy said that Rama Bridge is another historical landmark of India like the Himalayas and tradition should not be touched.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X