மகளிருக்கு கட்டணமில்லா பேருந்தின் நிலையை பாருங்கள்.. ரோட்டில் உடைந்து விழுந்த படிக்கட்டு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கட்டணமின்றி மகளிர் பயணிக்கும் அரசு பேருந்தில் திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டினை ரோட்டிலிருந்து ஓட்டுநர், நடத்துனர் தூக்கி வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்றது. பதவியேற்றதும் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாகவும் ஐந்து உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

அதில் ஒன்றுதான் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் என்பதாகும். மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.
மகளிருக்கு சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத் திட்டம் மே 7-ம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய தினமே அரசாணை வெளியிடப்பட்டு மறுநாளே (மே 8) நடைமுறைக்கு வந்தது. இரவோடு இரவாக பேருந்துகளில் 'மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மிகவேகமாக பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் திட்டம்.
இந்தத் திட்டத்தால் கோடிக்கணக்கான மகளிர் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகிறார்கள். மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளின் நிலை பல இடங்களில் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அரசு டவுன் பஸ் ஒன்று, முடங்கியாறு சாலையில் சென்று கொண்டு இருந்தது. ராஜபாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது பஸ்சின் பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து சாலையில் விழுந்தது.
அப்போது படிக்கட்டில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். பின்னர் உடைந்த படிக்கட்டை டிரைவரும், நடத்துனரும் பணிமனைக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க நல்ல நிலையில் உள்ள பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications