சமபந்தி நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல்.. மயங்கி விழுந்த பாட்டி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு
Recommended Video

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழச்சியில் கூட்டநெரிசல் காரணமாக மூதாட்டி மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாவின் 50 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதிமுக, திமுக சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பல கோயில்களில் அரசு சார்பாக சமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாவட்டநிர்வாகம் சார்பாக சமபந்தி நடைபெற்றது. தொடர்விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் வருகை என்பது அதிகரித்தே காணபட்டது.
மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மற்றும் மாவட்டகாவல்கண்காணிப்பளர் ராஜராஜன், சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா என பலரும் கலந்துகொண்டு சமபந்தியில் உணவு உட்கொண்டனர்.
பின்னர் ஏழை எளிய மக்கள் 5௦௦க்கும் மேற்பட்டவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக ஆண்டாளுக்கு சாத்தபட்ட வேட்டி, சேலைகள் வழங்கபடும் நிகழ்ச்சியை மாவட்டஆட்சியர் ஆட்சியர் தொடக்கிவைத்தார். இதில் முறையான ஏற்பாடுகள் செய்யபடாததால் வயதான முதியவர்கள் பெரிதும் பாதிக்கபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் வழங்கி கொண்டிருக்கும் பொழுது மூதாட்டி ஒருவர் கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து கீழேவிழுந்ததால் சிறிது நேரம் பரபப்புடன் காணபட்டது. உடனடியாக காவல்துறையினர் மூதாட்டியை கூட்ட நெரிசலில் இருந்து மீட்டு ஓய்வெடுக்க வைத்தனர். சிலர் கடும் தள்ளுமுள்ளுக்கும் சிரமத்துக்கும் இடையே வாங்கி சென்றனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications