விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையம் அதிரடி.. அதிகாலையில் ரூ. 2.28 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது.. கடும் பரிசோதனை!

விருதுநகரில் இன்று அதிகாலையில் இருந்து மட்டும் சுமார் 2.28 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகரில் இன்று அதிகாலையில் இருந்து மட்டும் சுமார் 2.28 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணையமும் மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

Election Commission seized Rs.2.28 Cr worth gold in checking today in Virudhunagar

தேர்தல் காரணமாக தமிழகம் முழுக்க நடத்தை விதி முறைகள் அமலில் இருக்கிறது. தமிழகம் முழுக்க ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில்தான் அதிக பணம், நகைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் வீடுகளில் கூட திடீர் சோதனைகள் நடக்கிறது.

திமுக 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்' நடத்துகிறது.. அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு.. பின்னணி இதுதான்! திமுக 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்' நடத்துகிறது.. அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு.. பின்னணி இதுதான்!

இந்த நிலையில் விருதுநகரில் ரூ. 2.28 கோடி மதிப்புள்ள தங்கமும் , பணமும் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் நடந்த சோதனையில் இன்னும் பல்வேறு இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Election Commission seized Rs.2.28 Cr worth gold in checking today in Virudhunaga, Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X