குடும்பத் தகராறு.. 1 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!
விருதுநகர்: குடும்பத் தகராறில் தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பது மகன் மாரிக்கண்ணன் (29) இவர் தனியார் கார், வேன்களுக்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு இவரது அத்தை மகள் சங்கரேஸ்வரியை (23) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு மவுனி கணேஷ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது
இந்நிலையில் திருமணமான நாள் முதலே மாரிக்கண்ணனுக்கும் சங்கரேஸ்வரிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் குடும்பத் தகராறு அதிகமானது.
இதன் காரணமாக இன்று தனது 1 வயது குழந்தை மவுனிகணேஷ்க்கு விஷம் கொடுத்து விட்டு தானும் அதே விஷத்தை அருந்தி தற்கொலை செய்துள்ளார் மாரிக்கண்ணன். இருவரும் விஷம் அருந்தியதை அறிந்த உறவினர்கள் உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications