விஜய் வருகையால் திமுகவின் ஓட்டுகள் உடையுமே தவிர.. ராஜேந்திர பாலாஜி சொன்னது என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விஜயின் அரசியல் பிரவேசத்தால் திமுகவின் ஓட்டுக்கள் உடையுமே தவிர. அதிகமுவிற்கு சிறிதளவு கூட பாதிப்பு வராது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் அருகே வள்ளியூரில் அதிமுகவின் 53 ஆவது ஆண்டு கட்சியின் கொடி ஏற்று விழாவை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

vijay rajendra balaji

இந்நிகழ்ச்சியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், திமுக ஆட்சி தறுதலை ஆட்சி. பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடையாது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் திமுக கட்சி போர்வையில் பின்னால் ஒளிந்து கொள்கின்றன. பொங்கல் பரிசு 1,000 வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை உருவாகியுள்ளது.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.பட்டாசு தொழில் பாதுகாப்பாக இல்லை. இதற்கு திமுக அரசு தான் காரணம் என குற்றம் சாட்டினர். திமுக ஆட்சியை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்‌ என்றார்.

அதைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி சிதறு தேங்காய் போல் உடையும் சூழல் உருவாகியுள்ளது. இனிமேல் திமுக கூட்டணியை தாங்கி பிடிக்கவும் முடியாது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதாக பேசியுள்ளது திமுக ஆட்சியை ஆதரிப்பவர்களும் எதிர்க்கின்றனர்.

எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. திமுக ஆட்சி தேவையா என மக்கள் நினைக்கின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கும் கூட அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தவர். அதிமுக ஆட்சியில் இருந்த பக்குவம் திமுக ஆட்சியில் கிடையாது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் சட்டப்பூர்வமான நடவடிக்கை என்றால் ஏற்றுக் கொள்வார்கள். அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் துரைமுருகனுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் வகையில் இருந்தால் அது வருந்தத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு வெடிவிபத்துக்கள் நடந்து வருவது குறித்த கேள்விக்கு, பட்டாசு வெடிவிபத்துக்கு ஆளும் திமுக அரசு தான் காரணம். பட்டாசு தொழிலாளர்களுக்கும், ஆலை உரிமையாளர்களும் அச்சத்துடனேயே தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர் ரைடு சோதனையால் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகாரிகளின் தொடர் சோதனை நடவடிக்கையால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பதறி பதறி வேலை செய்யும் போது வெடி விபத்து ஏற்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடிவிபத்து தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு ஆளும் திமுக அரசு தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பட்டாசு தொழிலை நசுக்குகிற பணியில் மறைமுகமாக திமுக ஈடுபட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் இது போன்ற பட்டாசு வெடி விபத்துக்கள் நடைபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு வெடி விபத்து நிகழும். ஆனால் திமுக ஆட்சியில் தொடர்ந்து பட்டாசு வெடி விபத்துக்கள் நடந்து வருகிறது.

பட்டாசு தொழில் தொழிலாளர்கள், நூல் கிடைக்காததால் நெசவாளர்களும், விதை நெல் கிடைக்காததால் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். திமுக ஆட்சியில் எல்லா மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்ற மனநிலை மக்கள் மனதில் உருவாகியுள்ளது. இபிஎஸ் தலைமை வேண்டுமென்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

200 க்கு 200 தொகுதியில் திமுக வெற்றி பெறும் என இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலளித்த அவர், 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும். 200க்கு 200 தொகுதி வெற்றி என திமுகவுக்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளிலும் அதற்கான வாய்ப்பே தெரியவில்லை.

அதிமுகவிற்கான ஆதரவு மனநிலை புத்தாண்டு 2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். எப்போது தேர்தல் வரும் இரட்டை இலைக்கு வாக்களிக்கலாம் என்று மக்கள் ஆர்வமாக உள்ளனர். நிச்சயமாக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சராக இபிஎஸ் வருவார் என்றார்.

தமிழகம் முழுவதும் மார்ச் முதல் நடிகர் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கு, யாராலும் அதிமுகவுக்கு பாதிப்பு வராது. மறைந்த முன்னாள் முதல்வர்களான‌ எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இருக்கும் வாக்குகளை எந்த தலைவர் வந்தாலும் பிரிக்க முடியாது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் வருகையால் திமுகவின் ஓட்டுக்கள் உடையுமே தவிர அதிமுகவிற்கு சிறிதளவு கூட பாதிப்பு வராது என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+