காற்று லேசாக திரும்புதே.. ராதிகாவிற்கு கிடைத்த "வெளிச்சம்".. விருதுநகரில் களநிலவரம் எப்படி இருக்கு?
விருதுநகர்: விருதுநகர் தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக மாறி உள்ளது. இங்கே பாஜக சார்பாக ராதிகா சரத்குமார் - அதிமுக கூட்டணியில் தேமுதிக விஜய பிரபாகரன் - காங்கிரஸ் மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் இங்கே களமிறக்கப்பட்டு உள்ளனர்.
பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நிலையில் ஒரே வாரத்தில் விருதுநகர் வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த இவர் அங்கே பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முதல்நாள் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு, பரப்புரையை ரத்து செய்து சென்னை புறப்பட்டுச் சென்றார். சிரித்த முகத்தோடு வந்தவர்.. கூட்டம் இல்லாததால் சிரிப்பை மறந்து டென்சன் ஆனார்.
கூட்டம் வரும் என்று காத்திருந்தவர் கடைசியில் அங்கிருந்து சென்றார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டம் சேரவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியில் சரத்குமார் மட்டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்
அங்கே ராதிகாவை வேட்பாளராக நியமித்ததை பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. நேற்று விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம் விருதுநகரில் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று கூட்டத்தில் ராதிகாவை ஆதரிக்க பாஜக நிர்வாகிகள் யாரும் வராமல் ஏமாற்றம் அளித்துள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.
உண்மையான கள நிலவரம்: ஒரு பக்கம் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் பலரும் ராதிகா சரத்குமாருக்கு பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் களநிலவரம் என்னவோ ராதிகாவிற்கு கொஞ்சம் சாதகமாகவும் உள்ளது என்கிறார்கள்.
முக்கியமாக அங்கே உள்ள நாடார் வாக்காளர்கள் பலரும் ராதிகா மீது அனுதாபம் கொண்டு உள்ளனராம். திமுக இந்த முறை நாடார் வேட்பாளர்களை இறக்கவில்லை என்ற அதிருப்தி அந்த ஜாதியினரை இடையே உள்ளது. இது போக நாடார் தலைவர்களை இதுவரை மாணிக்கம் தாகூர் நேரில் சென்று பார்க்கவில்லையாம். ஆனால் ராதிகா சரத் குமார் முதல் நாளே நாடார் தலைவர்களை நேரிடியாக போய் பார்த்து ஆதரவு கேட்டுள்ளார்.
அதோடுதான் நிலைமை கொஞ்சம் அவருக்கு சாதகமாக இருக்கிறதாம். இன்னொரு பக்கம் அங்கே புதிய பஸ் ஸ்டான்ட் கட்டியும் கூட அதை திறப்பதற்கான வேலைகளை இன்னும் பார்க்கவில்லை. இதையும் சுட்டிக்காட்டி மாணிக்கம் தாக்கூரை மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனராம்.
பாஜக மீது அனுதாபம் இல்லாதவர்கள் கூட விஜயகாந்த் முகத்திற்காக விஜயபிரபாகன் மீது அனுதாபம் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. மாணிக்கம் தாக்கூர் பெரிதாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற புகார்தான் மக்கள் இடையே உள்ளதாம். இப்போது ராதிகா - விஜய்பிரகாரன் இடையே கடும் போட்டி உள்ளது.
இவர்களுக்கு இடையில் பிரியும் வாக்குகள் வேண்டும் என்றால் மாணிக்கம் தாகூர் பக்கம் செல்லலாம் என்கிறார்கள். விரைவில் மாவட்ட அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் வேலை செய்ய தொடங்கியதும் களநிலவரம் மாறும் என்கிறார்கள். மாணிக்கம் தாகூர் பலமே பூத் கமிட்டி மற்றும் உள்ளூர் நிர்வாகிகள். அவர்களை வேலைகளை தொடங்கியதும் களநிலவரம் காங்கிரசுக்கு சாதகமாகவும் மாறும் என்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications