கள்ளக்காதலி வீட்டில் இறந்து கிடந்த ஊராட்சி மன்ற தலைவர்.. விருதுநகர் அருகே பதற்றம்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிழவனேரி என்ற கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் என்பவர் திடீரென உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கிழவனேரி என்ற கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக கார்த்திக் (வயது 31) என்பவர் இருந்து வந்தார். இவரது திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. திருமணத்தை மீறிய உறவால் கார்த்திக் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்த்திக்கிற்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் , காரியாபட்டி அருகே வசிக்கும் 29 வயது இளம் பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழகி வந்துள்ளார். மீனாவிற்கும் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். கார்த்திக்கின் திருமணத்தை மீறிய உறவை அறிந்த அவரது மனைவி கோபித்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீனாவிற்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை தனக்குப் பிறந்த குழந்தை என்பதில் உறுதியாக இருந்த கார்த்திக், தன்னோடு குடும்பம் நடத்துவதற்கு மீனாவை அழைத்துள்ளாராம். தன்னுடைய கிராமமான கிழவனேரிக்கு வரச்சொல்லி மீனாவிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தாராம். ஆனால், கணவர் மற்றும் குழந்தைகளோடு வாழ்க்கை நடத்தும் மீனா, கார்த்திக்கின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.
இந்த விவகாரத்தால் மீனாவிற்கும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று தான் சாகப்போவதாக ஆவேசமாக கூறிவிட்டு கார்த்திக் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டராம். வெகுநேரமாகியும் கதவைத் திறக்காததால், அவசர போலீஸுக்கும், கார்த்திக்கின் நண்பர்களுக்கு மீனா தகவல் கொடுத்துள்ளார். நண்பர்கள் வந்து கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, சேலையால் தூக்கிட்டு கார்த்திக் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கும் கார்த்திக்கை கொண்டு சென்றனர், அங்கும் அவர் இறந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து கார்த்திக் மரணம் குறித்து அறிந்து கிழவனேரி கிராமத்து மக்களும் உறவினர்களும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. கார்த்திக் உடலை உடற்கூராய்வுக்காக எடுத்துச்செல்ல முற்பட்டபோது, கார்த்திக் இறப்புக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி, காரியாபட்டி - கள்ளிக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள்.
காரியாபட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். அதன்பிறகே, கார்த்திக் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள காரியாபட்டி போலீசார் மீனாவை காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளும் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். பண விவகாரத்தில் பிரச்சனை இருந்ததாகவும், கார்த்திக் உடலில் ரத்த காயம் உள்ளதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே என்ன நடந்தது என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications