நில அளவை.. செங்கல்பட்டு, கோவை, விருதுநகர் உள்பட 10 மாவட்டங்களில் வரும் சூப்பர் வசதி
விருதுநகர் : நில அளவை என்பது வருவாய்துறையில் மிக முக்கியமான பணியாகும். ஒரு இடத்தை பத்திரப்பதிவு செய்கிறார் என்றால், நில அளவை சரியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் நில அளவைக்கு தற்போது ஆன்லைனில் (இசேவை மையம் மூலம்) விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நில அளவைகளை துல்லியமாக்கும் வகையில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நில ஆவணங்களை ஆன்லைனில் பார்க்கும் வசதி, வில்லங்க சான்றிதழ்களை ஆன்லைனிலேயே வாங்கிபார்க்கும் வசதி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நிலம் தொடர்பான வில்லங்கங்களை மக்கள் அறிய வேண்டும் என்று அரசு இந்த வசதிகளை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகளை அரசு அறிமுகம் செய்திருந்தது.இதன்படி பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடிகிறது.
அதேபோல் கிராமப்புறங்களில் நில விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் "வில்லேஜ் மாஸ்டர்" என்ற இணையதளத்தை உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு நிலத்தின் சர்வே எண் தெரியாவிட்டாலும், அதன் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்து, உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த இணையதளத்தில் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து ஊரக பகுதிகளின் நில விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில். மற்ற மாவட்டங்களில் உள்ள நகர் பகுதிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எனவே இன்னும் ஒரு மாதத்தல் தமிழகத்தின் அனைத்து நிலத் தகவல்களும் இதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இது ஒரு புறம் எனில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நில அளவை மற்றும் நிலவரித்துறை மூலம் தமிழகத்தில் உள்ள நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (நக்ஷா) திட்டம் முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவங்கை மாவட்டம்- காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோவை மாநகராட்சி 7 வார்டுகள், விருதுநகர் ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை நில அளவை ஆவணங்களும், நகராட்சி நிர்வாகத்தின் சொத்து வரி விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.அதனை இணையளத்தில் பார்க்க முடியும். இதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்துக்கான அளவுகள் மற்றும் பரப்புகளை அமைவிடப் புள்ளி விவரங்களுடன் மிகத் துல்லியமாக அறியலாம். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.10.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின் தொடக்க விழா விருதுநகரில் இன்று நடந்தது. கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு நவீன ட்ரோன் மூலம் நகர நில அளவைப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் அமைச்சர் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின்கீழ் 13.85 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 49,886 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 1.67 கோடி இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சுமார் 41.7 லட்சம் இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications