விருதுநகரில் பயங்கரம்.. வீட்டு வாசல்படியில் குடித்ததை தட்டி கேட்ட மதிமுக பிரமுகர் படுகொலை
விருதுநகர்: விருதுநகர் அருகே மதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). மதிமுக பிரமுகரான இவர் அதே பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையை நடத்தி வந்தார்.

மதிமுக கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். இவர் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த அய்யலுசாமியின் மகன் மாரிமுத்து(20) என்பவர் அடிக்கடி இரவு வேளையில் மது குடித்து வந்துள்ளார்.
இதனை சிவக்குமார் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சிவக்குமார் வீட்டின் அருகே அமர்ந்து மாரிமுத்து மது அருந்தியுள்ளார். அதைப் பார்த்த சிவகுமார் மாரிமுத்துவை வழக்கம் போல் கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து சிவக்குமாரை பின்புறமாக அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ.இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து தப்பி ஓடிய மாரிமுத்து மீது சாத்தூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications