மோடியை பிரதமராக வர விடமாட்டோம்னு எடப்பாடி சொல்வாரா? கூட்டணி முறிவெல்லாம் நாடகம்.. காங். எம்பி
விருதுநகர்: மோடியை பிரதமராக வர விடமாட்டோம் என சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் மாணிக்கம் தாகூர் எம்பி நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் 9 வாரங்களாக 100 நாள வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு உரிய சம்பளத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கவில்லை.

ஆனால் டெல்லியில் இருந்து வந்து தமிழகத்தை தூய்மை செய்வத போல் நாடகமாடி வருகிறார். அவரது வேலையை சரியாக செய்து ஏழை, எளிய மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டும். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே பாஜகவினர், கன்னட அமைப்பினர் மூலம் மொழி பிரச்சினையை உருவாக்கி வருகிறார்கள்.
அதை பார்த்துவிட்டு சீமான் போன்றவர்கள் எல்லாம் பொய்யான அரசியல் செய்து வருகிறார்கள். பாஜக- அதிமுக கூட்டணி முற்றிலும் முடிவுக்கு வரவில்லை. மோடியை பிரதமராக வரவிடமாட்டோம் என சொல்ல எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினருக்கு தைரியம் இல்லை. இன்னும் பின் வழியாக சென்று மோடியிடம் பூங்கொத்து கொடுத்துவிட்டுதான் வருகிறார்கள்.
அதனால்தான் இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என நாங்கள் சொல்கிறோம். வெளி வேஷத்திற்காகவும் அண்ணாமலைக்காகவும் கூட்டணி முறிந்துவிட்டதாக நாடகமாடி வருகிறார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக இடையே கடந்த வாரம் கூட்டணி முறிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி இல்லை என எடப்பாடி தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்தும் கூட சிலர் அதிமுக- பாஜக இடையே கூட்டணியை புதுப்பிக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பாஜகவுடன் இனி பேச்சில்லை என்கிறார்கள்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த அண்ணாமலையை டெல்லி மேலிடம் வரவழைத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பித்தால்தான் பாஜகவுக்கு வளர்ச்சி என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பியுள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்றே சொல்கிறார்கள்.
தேவைப்பட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் எடப்பாடியோ இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளார். ரெய்டுகளுக்கெல்லாம் பயப்படும் இயக்கம் அதிமுக இல்லை என மூத்த நிர்வாகிகளும் தெரிவித்து வருகிறார்கள்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications