சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சாத்தூர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் நயினார் நாகேந்திரன், சரத்குமார் உள்ளிட்டோர் ரோடு ஷோ மேற்கொண்டதை சாமானிய மக்கள் கண்டுகொள்ளாமல் நடந்து சென்றது பேசுபொருளாகி இருக்கிறது. நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் மட்டும் அந்த வாகனத்தில் இரு புறமும் நடந்து வந்தனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதனையொட்டி அத்தனை அரசியல் கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சொந்த தொகுதியான நெல்லையை விட்டுவிட்டு, சாத்தூர் தொகுதியில் களமிறங்கி இருக்கிறார்.

Nainar Nagendran Road Show

சாத்தூரில் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் தொகுதியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே அவரின் இரு மகன்களும் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அவர் பக்கம் வரும் என்று கணக்கிட்டுள்ளார். தேர்தல் பணிக்காக மட்டும் நெல்லையில் இருந்து சுமார் 10 குழுக்களை நயினார் நாகேந்திரன் இறக்கி பணியாற்றி வருகிறார். அவருக்கு அதிமுகவும் உறுதுணையாக இருந்து வருகிறது.

நிதின் நபினின் ரோடு ஷோ

இருந்தாலும் நயினார் நாகேந்திரன் வெளியூர்க்காரர் என்ற விமர்சனத்தை சாத்தூர் மக்களிடையே கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் சாத்தூர் மக்களை திரும்பி பார்க்க வைக்கும் நோக்கில் நயினார் நாகேந்திரன் பல்வேறு திட்டங்களை அரங்கேற்றி வருகிறார். அந்த வகையில் பாஜக தேசிய தலைவரான நிதின் நபின் சாத்தூர் தொகுதியில் ரோடு ஷோர் சென்றார்.

கண்டுகொள்ள சாத்தூர் மக்கள்

அவருடன் நடிகர் சரத் குமார் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த ரோடு ஷோவின் போது நிதின் நபின், நயினார் நாகேந்திரன் ஆகியோர் வணக்கம் வைத்து கொண்டே சென்றாலும், அங்கிருந்த மக்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் அவரவர் பணிகளை இயல்பாக செய்கின்றனர்.

காற்று வாங்கிய ரோடு ஷோ

நயினார் நாகேந்திரன் போன்ற பவர் சென்டர் ரோடு ஷோ போகும் போதும் கூட, பாஜகவை பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை. நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் மட்டும் அந்த வாகனத்தின் முன்பும், பின்பும் மொத்தமாக 50 பேர் மட்டும் நடந்து செல்கின்றனர். இந்த வீடியோ தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

நயினார் நாகேந்திரனுக்கு பின்னடைவு

நிதின் நபின் மற்றும் நயினார் நாகேந்திரனின் ரோடு ஷோவில் மக்கள் கூட்டம் இல்லாமல் காற்று வாங்கியது என்றே சொல்லலாம். இதனால் நயினார் நாகேந்திரன் கடுமையான அப்செட்டில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. தேசிய பாஜக தலைமை முன்பாக கூட்டத்தை காட்ட முடியாதது நயினார் நாகேந்திரனுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது மதுரையில் ரோடு ஷோ மேற்கொண்ட அமித்ஷாவுக்கு போதிய அளவு கூட்டம் இருக்கவில்லை.

பாஜகவின் செல்வாக்கு

சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்ட போதும், பாஜகவினரால் கூட்டத்தை காட்ட முடியவில்லை. இந்த சிக்கல் பாஜகவுக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. தேமுதிக போன்ற கட்சிகள் கூட கூட்டத்தை கூட்டுவதில் கில்லாடியாக இருந்து வரும் சூழலில், தேசிய கட்சியான பாஜகவுக்கு கூட்டம் வராதது, அக்கட்சியின் செல்வாக்கை மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டில் நிரூபணமாக்கி இருக்கிறது.

பாஜகவின் பிம்பம்

சாத்தூர் தொகுதி அதிமுகவினரும் கூட நிதின் நபின் மற்றும் நயினார் நாகேந்திரனின் ரோடு ஷோவில் பங்கேற்கவில்லை. இதனால் சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் வெற்றி சாத்தியமா என்ற கேள்வியும் இந்த ரோடு ஷோ மூலம் எழுந்துள்ளது. அதேபோல் தென் மாவட்டங்களில் பாஜக வளர்ந்துள்ளதாக காட்டப்பட்ட ஒட்டுமொத்த பிம்பமும் இந்த ரோடு ஷோ மூலமாக அடிபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+