சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! 2 அறைகள் தரைமட்டம்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரம் புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அங்கு கூலித் தொழிலாளிகளாக தங்கள் உயிரை பணயம் வைத்து சொற்ப பணத்திற்காக பட்டாசுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55). இவர் செங்கமலப்பட்டி அருகே நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகின. மேலும் 7 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இதில் ஒரு தொழிலாளியின் உடல் பட்டாசு ஆலையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, ஆலையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பதைபதைப்பு அடங்குவதற்குள் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அறைகள் தரைமட்டமாகின. மீதமிருந்த வெடிமருந்தை இருப்பில் வைத்திருந்த போது வேதியியல் மாற்றத்தால் வெடிவிபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகின.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications