விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்.. அச்சத்துக்கு காரணம் இதுதான்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதை அடுத்து, 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
ஆய்வு நடத்தும்போது விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், ஆலைகளின் உரிமம் உடனடியாக ரத்தாகும் என்பதால், உரிமையாளர்களே ஆலைகளை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமாக ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகள் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பதாக வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படாததே பட்டாசு ஆலை விபத்துகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி சின்னக்காமன்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஜூலை 6 ஆம் தேதி கீழத்தாயில் பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு வந்ததைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறாக நடத்தப்படும் சோதனையில் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை மீறியிருந்தால் உடனடியாக ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும். இதனால் இந்த அறிவிப்பு வெளியானதுமே விருதுநகரில் உள்ள சுமார் 200க்கும் அதிகமான பட்டாசு ஆலை உரிமையாளர்கள், உரிமம் ரத்தாகிவிடுமோ என பயந்து ஆலைகளை மூடி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவையடுத்து 15 ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு நடக்கவிருந்தன. இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று மூடப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications