விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹெல்மட் சரியா போடல.. குறுக்கே வந்த நாய்.. பைக்கில் வந்த போலீஸ்காரர் பேரிகார்ட்டில் மோதி பலி!

சாலை தடுப்பு கம்பியில் மோதி போலீஸ்காரர் பலியானார்

Google Oneindia Tamil News

Recommended Video

    குறுக்கே நாய் வந்ததால் விபத்து... பைக்கில் வந்த போலீஸ்காரர் பலி!

    விருதுநகர்: நாய் ஒன்று குறுக்கே வந்துவிடவும்.. பைக்கில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் நிலைதடுமாறி.. ரோட்டில் இருந்த பேரிகார்ட்டில் தலை மோதி உயிரிழந்தார்.

    விருதுநகர் எம்.ரெட்டியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு காவலராக வேலை பார்த்து வந்தவர் சாம்பிரேம் ஆனந்த். இவர் சொந்த ஊர் பொம்மக்கோட்டை.

    policeman died in accident near aruppukkottai

    நேற்றிரவு வேலை விஷயமாக சென்றுவிட்டு, முத்துராமலிங்கபுரம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் நிலைதடுமாறிய ஆனந்த், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் போய் பைக்கில் மோதிவிட்டார். இதில், அவரது தலை அந்த தடுப்பு கம்பியில் பலமாக மோதி ரத்தம் கொட்டியது.. இதை கண்டு அலறிய பொதுமக்கள் அவரை உடனடியாக அருப்புக் கோட்டை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

    நாகமணிதான் பால் கொடுத்தது.. குடிச்சுட்டுதான் மயங்கி விழுந்தேன்.. கணவர் கொடுத்த திகில் வாக்குமூலம்நாகமணிதான் பால் கொடுத்தது.. குடிச்சுட்டுதான் மயங்கி விழுந்தேன்.. கணவர் கொடுத்த திகில் வாக்குமூலம்

    ஆனால் காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது.. அதனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் வரும்போது, இவர் ஹெல்மட் போட்டுதான் வந்திருக்கிறார்.. ஆனால், அதை சரியாக போடவில்லை.. சின்ஸ்ட்ராப் என்னும் பாதுகாப்பு பட்டையை அவர் இழுத்து பொருத்தியிருந்தால், தலையில் இந்த அளவுக்கு படுகாயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்கிறார்கள். போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    m.reddiyapatti policeman died in bike accident near aruppukkottai and investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X