'நீங்கதான் அ.தி.மு.க.வை காப்பாற்றணும்'.. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் .. பரபரப்பான ராஜபாளையம்!
விருதுநகர்: விருதுநகரில் அ.தி.மு.க தொண்டர்கள் என குறிப்பிட்டு சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
Recommended Video
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு வந்து அதிரடி காட்டினார்.
சசிகலா சென்னைக்கு வந்தவுடன் அதிமுக தொண்டர்களை சந்திப்பார் என தகவல்கள் பரவியதால் ஓபிஎஸ், இ.பி.எஸ் ஆடிப்போனார்கள்.

சசிகலாவின் அதிரடி
ஆனால் சென்னை வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அமைதி கொண்டார். அதன்பிறகு அதிமுக தலைமை மூச்சு விட ஆரம்பித்தது. தற்போது அதிமுக தேர்தலில் தோற்றவுடன் மீண்டும் அதிரடியை கையில் எடுத்துள்ளார் சசிகலா. கடந்த சில மாதங்களாக அதிமுகவினரை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கட்சியில் இருந்து நீக்கம்
இ.பி.எஸ் உள்ளிட்டோரை தாக்கி பேசுவது போலவும், அதிமுகவை கைப்பற்றுவது போலவும் சசிகலாவின் பேச்சு ஒவ்வொன்றும் அமைந்துள்ளன. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சசிகலாவுடன் பேசும் அதிமுகவினரை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். ஆனாலும் இதற்கு முடிவு கட்ட முடியவில்லை.

பரபரப்பு போஸ்டர்
சசிகலாவுடன் ஆடியோவில் பேசும் அதிமுகவினர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க சசிகலா அதிமுகவுக்கு வர வேண்டும் என்று அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஓட்டியும் வருகின்றனர். இந்த நிலையில் ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா படம்
உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள், விருதுநகர் மாவட்டம் என்று அடியில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில் 'அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற அம்மாவின் வழியில் எங்களின் தியாக தலைவியே வாருங்கள்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் சசிகலா புகைப்படம் பெரியதாகவும், எம்ஜிஆர் , அண்ணா மற்றும் ஜெயலலிதா படங்கள் சிறியதாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
