கடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை
விருதுநகர்: கடவுளை நம்புகிறவர்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் நடைபெறுகிறது. இந்த நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்தில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், தேமுதிக இணைந்துள்ள கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணியாகும். இது ராசியான கூட்டணியாகும். அழகர்சாமி, கேப்டன் விஜயகாந்த் மனதில் இடம்பிடித்த வேட்பாளர் ஆவார்.

ரயில்வே பாலம்
அவரை வெற்றி பெற வைத்தால் விருதுநகர் தொகுதியில் அனைத்து திட்டங்களையும் செய்து முடிப்பார். குறிப்பாக திருமங்கலத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே பாலத்தை உடனடியாக முடித்து வைப்பார்.

கோடி கோடியாக பணம்
இங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற மாணிக் தாகூர் 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்து எதையும் செய்யாதவர். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது நண்பர்கள் வீட்டிலும் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்கிறது.

அலிபாபா
விஜயகாந்தையும் தேமுதிகவையும் அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று அசிங்கப்பட்டுள்ளார்கள். எனவே அலிபாபாவும் 40 திருடர்களும் காணாமல் போய்விடுவார்கள். இவர்கள் யார் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

வேதனை
எங்களுடைய கூட்டணி கடவுளை நம்பும் கூட்டணி. ஆனால் கடவுளே இல்லை என்று சொல்லும் திமுக கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு நாளை யாரும் வேதனைப்படக் கூடாது. கடவுளை நம்புவோர் எனக்கு வாக்களியுங்கள் என்று பிரேமலதா தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications