மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை? அதிரடியாக சொன்ன அதிமுக.. எப்போ தெரியுமா? கவனித்த திமுக
விருதுநகர்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், திமுக அரசு ரூ.1000 வழங்கப்பட்டு வரும்நிலையில், விடுபட்டுள்ளவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அமைச்சர் நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில், அதிமுக தரப்பிலிருந்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதனை திமுக தரப்பு உற்றுநோக்கி வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக விமர்சித்து வருகின்றன.. மகளிர் அனைவருக்குமே 1000 ரூபாய் தருவோம் என்று வாக்குறுதியில் சொல்லிவிட்டு, "தகுதி வாய்ந்த" பெண்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்?, எதை வைத்து "தகுதி"யை மதிப்பிடுகிறீர்கள்? என்று கேள்வி மேல் எழுப்பியவாறே உள்ளது. அனைத்து பெண்களுக்குமே 1000 ரூபாய் தர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்..

அதேசமயம், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டமானது, பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.. தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும், திமுகவின் அபார வெற்றிக்கு, முக்கிய பங்காற்றி வருகிறது.
தமிழக அரசு: "பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்குவது போன்று ஆண்களுக்கும் வழங்கப்படுமா" என்று அமைச்சர் பெரியகருப்பனிடம் செய்தியாளர்கள் கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்குஅமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், "திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையினை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த உரிமைத் தொகை தங்களுக்கு இல்லையே என்ற ஆண்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரும்" என்றார்.
உரிமைத்தொகை: அமைச்சரின் இந்த தகவலானது பெருத்த மகிழ்ச்சியை ஆண்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மகளிர் உரிமைத்தொகையை மறுபடியும் சீண்டியிருக்கிறது அதிமுக.
சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, "மக்களவை தேர்தல், சட்டப் பேரவை தேர்தல் எனப் பிரித்துப் பார்த்து வாக்களிப்பவர்கள் தமிழக மக்கள். இந்த மக்களவைத் தேர்தலில் மோடி வேண்டாம் என்று ஒரு அணியும், மோடி வேண்டும் என்று ஒரு அணியும் போட்டியிட்டது. அவர்களைத் தாண்டி அதிமுக தனது வாக்கு வங்கியை நிரூபித்து உள்ளது.
அதிரடி: 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.. அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனே ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் பாகுபாடின்றி மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.. அதற்காக மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்... அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது" என்றார் ராஜேந்திர பாலாஜி.
ஆனால், நேற்றைய தினம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆயிரம் ரூபாய் பிரச்சனை தான் தற்பொழுது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் ஆயிரம் ரூபாய் கிடைக்காத மகளிர் என்னுடன் உரிமையுடன் சண்டை போடுகிறர்கள். அதனால், அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்" என்றார்
அந்தவகையில், விடுபட்ட அனைவருக்குமே உரிமைத்தொகை வரபபோகிறதா? பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் ரூ.1000 உதவித்தொகையை திமுக தரப்போகிறதா? அல்லது தேர்தலில் வெற்றி பெற்று வந்து ரூ.2500 அதிமுக தரப்போகிறதா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications