சீமான், அண்ணாமலை பேச்சு வெறும் விளம்பரம்.. எம்பி மாணிக்கம் தாகூர் ஓபன்
விருதுநகர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் மேட்ச் பிக்சிங் செய்து விளையாடி வருகின்றனர். விளம்பரத்துக்காக பேசி வருகின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காவலர் குடியிருப்பு பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி பாடுபடும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மேட்ச் ஃபிக்சிங் செய்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
வெறும் விளம்பரத்துக்காக சீமானும், அண்ணாமலையும் பேசி வருகின்றனர். தமிழக மக்களுக்கு அண்ணாமலை மற்றும் சீமானின் பேச்சுகள் போரடித்து விட்டன. நாம் தமிழர் கட்சியை சீமான் கலைத்துவிட்டு பாஜகவில் சேர்ந்து விடலாம். தொடர்ந்து, பாஜகவின் கொள்கைகளைத்தான் சீமான் பேசி வருகிறார். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளைப் பேசி வருகின்ற சீமான் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். சீமான், அண்ணாமலை செய்வதைப் போல இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சட்டப் பேரவையில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.
கேள்விகள் கேட்க வேண்டிய நேரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கட்சியினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தமிழக அரசுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளும் கேள்வியை எழுப்பி வருகின்றன. நல்ல காரியங்களைச் செய்தால் தமிழக அரசைப் பாராட்டுவோம். அதே சமயத்தில் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் எங்களது கடமைதான்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்விகளை எழுப்பின. இந்த சம்பவத்தில் திமுக அரசும் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை ஒரே நாளில் கைது செய்துள்ளது. ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சி பாலியல் சம்பவ வழக்கில் குற்றவாளிகளை 11 நாட்களுக்குப் பின்னர் தான் காவல்துறை கைது செய்தது என்று குறிப்பிட்டார். மேலும், பெண்களுக்கு எதிரான சட்ட மசோதா வரவேற்கக்கூடியதாகும் என்று தெரிவித்தார்.
-
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
சீமான் குழந்தைக்கு சீர் செய்ய என்ன காரணம்? தாக்கூருக்கு அருகதை இல்லை! அனிதா ராதாகிருஷ்ணன் அட்டாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications