2 வடமாநில தொழிலாளர்கள் பலி.. சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபரீதம்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டதில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டின் பட்டாசு தயாரிப்பு மையமாக அறியப்படுகிறது. சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. தொடர்ந்து இப்பகுதி பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. வெடி விபத்துகள், பட்டாசு தொழிலில் பாதுகாப்பு நடைமுறைகளின் போதாமை குறித்து கேள்வி எழுந்து வருகிறது.

ஆலைகள் மட்டுமல்லாது, சட்டவிரோதமாகவும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சாத்தூர் அருகே அமைந்துள்ள கே. மேட்டுப்பட்டியில் சரவணன் என்பவரது விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டதில், சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications