பாம்பு அதுவும் கட்டுவிரியன்.. இன்சூரன்ஸ் பணம் படுத்திய பாடு! சிவகாசி பெண் போல யாருக்குமே நேர கூடாது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த ஒரு கொடூர சம்பவம், மனித மனம் எவ்வளவு கொடூரமாக மாற முடியும் என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டு நமக்கு காட்டியுள்ளது.... இன்சூரன்ஸ் பணத்திற்கான ஆசை, ஒரு குடும்பத்தை நொடியில் நரகமாக மாற்றிவிட்டது.. இப்படியும் கூட கொடுமைகள் நடக்குமா? என்ற அதிர்ச்சிதான் பொதுமக்களுக்கு அதிகரித்துள்ளது.. அப்படி என்னதான் நடந்தது சிவகாசியில்?
சிவகாசி முஸ்லிம் ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா.. இவருக்கு 42 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் முபாரக் அலி.. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்..

சிவகாசி குடும்பம்
அந்த விபத்துக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.11 லட்சம் பாத்திமாவுக்கு கிடைத்துள்ளது. கணவர் இறந்த பிறகு, தனது மகள் பர்வீன் (16), மகன் செய்யது பாரூக் (13), மாமியார் சிக்கந்தர் பீவி (65) ஆகியோருடன் பாத்திமா வாழ்ந்து வந்தார்.
4 வருடங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி (45) என்பவரை பாத்திமா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக வேலை பார்க்கும் அக்பர் அலி, ஆரம்பத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவே இருந்தார்.. ஆனால் காலப்போக்கில் அவரது மொத்த கவனமும் இன்சூரன்ஸ் பணத்தின் மீதே குவிந்தது.. எப்ப பார்த்தாலும் இன்சூரன்ஸ் பணம் பற்றி அடிக்கடி கேட்டு பாத்திமாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
இன்சூரன்ஸ் பணம் படுத்தும் பாடு
"பணம் தர வேண்டும்" என்ற வற்புறுத்தல், நாளுக்கு நாள் தம்பதிக்குள் சண்டையாக மாறியது. பாத்திமா பணம் தர மறுத்ததால், அக்பர் அலி பாத்திமாவை டார்ச்சர் செய்ய துவங்கி உள்ளார்.. ஒருகட்டத்தில் பாத்திமாவை கடுமையாக தாக்கியும் உள்ளார்.. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த பாத்திமா சிவகாசி டவுன் போலீசில் புகார் தரவும், போலீசார் அக்பர் அலியை கைது செய்தனர்.
பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், கடந்த சில மாதங்களாக உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போதுதான் பழிவாங்கும் எண்ணம் அக்பர் அலியின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது.. இன்சூரன்ஸ் பணம் தராவிட்டால், அவர்களில் யாருமே உயிருடன் இருக்க கூடாது என்ற கொடூர முடிவுக்கு வந்தார்..
நேற்று விடிகாலையில் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரம். அக்பர் அலி பெட்ரோல் கேனுடன் பாத்திமாவின் வீட்டுக்குள் நுழைந்தார். தூங்கிக் கொண்டிருந்த பாத்திமா, அவரது 2 பிள்ளைகள், மாமியார் ஆகியோரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். நொடியில் வீடு தீப்பற்றி எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

சீரியஸ் கண்டிஷன்
இந்த கொடூர செயலில் அக்பர் அலிக்கும் தீக்காயம் ஏற்பட்டது.. இதை அக்பர் அலியே எதிர்பார்க்கவில்லை.. இதனால் பதறிப்போன அவர், எரிந்த ஆடைகளை களைந்து எறிந்தபடி, சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள சிவகாசி டவுன் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று சரணடைந்தார்... உடலில் தீக்காயங்களுடன், ஆடையில்லாமல் வந்த அவரை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீக்காயமடைந்த வீட்டில் துடிதுடித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிக்கந்தர் பீவி உயிரிழந்தார்.
பர்வீன் 35 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், பாத்திமா, அவரது மகன் மற்றும் அக்பர் அலி மூவரும் 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்...
ஏற்கனவே தமிழ்நாட்டில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை பாம்பால் கடிக்க வைத்து கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சி விலகவில்லை.
கட்டுவிரியன் பாம்பு
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆய்வக உதவியாளராக பணியாற்றிய 56 வயது தந்தை கணேசனை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொன்றதாக அவரது மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதற்குள், இந்த சம்பவம் மக்கள் மனதில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. "பணம் மனிதனை எவ்வளவு கீழ்த்தரமாக மாற்றுகிறது" என்ற கேள்வியை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications