நிர்மலா தேவிக்கு மீண்டும் ஜாமீன்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி , உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக நிர்மலாதேவி ஆஜர் ஆகாத நிலையில் அவரை ஜாமீனை ரத்து செய்தும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் பேராசிரியர் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நிர்மலாதேவி ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகாராஜன் நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் என நிபந்தனை இட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், பேராசிரியர் நிர்மலா தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிர்மலாதேவியை சந்திப்பதற்கு அவரது உறவினர்களுக்கும் வழக்கறிஞருக்கு சிறைத் துறை அனுமதி அளிக்கவில்லை எனவும், சிறையில் காவலர்களால் நிர்மலாதேவி கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் காயம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் இன்று நிர்மலாதேவியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பேராசிரியர் நிர்மலாதேவி இந்த வழக்கிற்கு தொடர்புடைய அமைச்சரின் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications