ஒரே ரூமில் 8 பேர்.. இதான் விபத்துக்கு காரணம்! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து பற்றி ஆட்சியர் விளக்கம்
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்திற்கு, மனித தவறே காரணம் என்றும், ரசாயனம் கலக்கும் அறையில் 8 பேர் இருந்ததே விபத்திற்கு காரணம் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் 30க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு அறையில் மணி மருந்து எனப்படும் ரசாயன மூலப்பொருள் கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் பலரும் 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரையும் தீயணைப்பு படை வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த பட்டாசு ஆலையை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் ஜெயசீலன், “இன்று மதியம் 12.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையின் உரிமம் முறையாக பெற்று நடைமுறையில் தான் உள்ளது. ஒரே அறையில் விதியை மீறி 8 பேர் வேலை பார்த்ததாக விசாரணையில் தெரிய வருகிறது.
எனவே முதல்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரிய வருகிறது. ரசாயனம் கலக்கும் அறையில் அதிகளவில் நபர்கள் இருந்ததே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்து ஏற்படாமல் இருக்க போலீசார், தீயணைப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
இதனிடையே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications