யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டது.. எடப்பாடி
விருதுநகர்: ஸ்டாலினும், உதயநிதியும் செல்கிற இடமெல்லாம் என்னைப் பற்றி தான் பேசுறாங்க. அவர்களது தூக்கமே போச்சு. யாருக்கோ தூக்கம் போய்விட்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேருக்குமே தூக்கம் போய்விட்டது என்று நான் சொல்கிறேன் என சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழக அரசியல் களம் கொதித்து கொண்டு இருக்கிறது. அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் தேமுதிக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஏழை மக்கள் ஏற்றம் பெற்றார்கள் என்றால் அது அதிமுக ஆட்சியில் தான். மக்களுக்காகவே சேவை செய்து தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தலைவர்கள் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா அர்ப்பணித்தார். இதனால் தான் தமிழகம் செழிப்பான மாநிலமாக இருக்கிறது. எங்களுடைய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தனர். ஆனால் ஒரு தலைவர் வீட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர். யாரை சொல்கிறேன் என்று தெரிகிறதா?...
திரு கருணாநிதி அவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர். நம்ம தலைவர்களுக்கு என்று அரசியல் வாரிசு கிடையாது. நாம் தான் பிள்ளைகள். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் நம் பிள்ளைகள் என்று கருதி வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே துவங்கப்பட்ட இயக்கம் அதிமுக. இதனால் யார் யாரோ அதிமுகவை அழிக்க நினைத்தனர். ஆனால் அவர்கள் தான் இதுவரை அழிந்துபோய் இருக்கிறார்கள்.
நம் கட்சியை விட கூட்டணி கட்சிக்காக நாம் அதிகம் உழைக்க வேண்டும். விருதுநகர் தொகுதியில் முரசு சின்னத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். அதிமுக என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. கூட்டணி கட்சிகளை மதிக்க கூடிய கட்சி. கூட்டணி கட்சியினரையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான் அதிமுகவின் எண்ணம்.
ஆனால் திமுக கூட்டணியில் எப்படி இருக்கிறது என்றால், சீட்டை கொடுத்துவிட்டு கூட்டணி கட்சியினரை அழ வைக்கிறார்கள். கூட்டணி கட்சி வேட்பாளரை கண்ணீர் வடிக்க வைக்கிறாங்க. இது தான் திமுக. ஆனால் அதிமுக கூட்டணிக்கு வந்தவர்களை கை தூக்கி விடுவோம். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இது தான் வித்தியாசம்.
திமுக என்றைக்கும் மற்றவர்களை வாழ வைத்ததாக சரித்திரம் கிடையாது. ஸ்டாலினும், உதயநிதியும் செல்கிற இடமெல்லாம் என்னைப் பற்றி தான் பேசுகிறாங்க. அவர்களது தூக்கமே போச்சு. யாருக்கோ தூக்கம் போய்விட்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேருக்குமே தூக்கம் போய்விட்டது என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் ஒரு கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, நான் இரவில் தூங்கி காலையில் கண் விழிக்கின்ற போது எனது நம் கட்சியிலே என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன் என்று சொல்கிறார்.
அப்படியென்றால் தூக்கம் போச்சு.. அவரே ஒத்துக்கிட்டாரு.. அவர்களோட கட்சிக்காரர்கள் என்ன அட்டூழியம் பண்ணுவாங்கன்னு அவரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார். இப்படிப்பட்டவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள். அவர்களுடைய தலைவரே பொதுக்குழு கூட்டத்தில் இப்படி பேசினால், அந்த கட்சி எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு எடப்பாடி பேசினார்.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்?












Click it and Unblock the Notifications